விளம்பர வாசலில்

மங்களம் பாத்திரக் கடையில்
சிரித்து வரவேற்கிறது காத்திருப்பில்
''வெண்கலச்சிலை ''

மங்கள் & மங்கள் பாத்திரக் கடையில்
காத்திருந்து வெட்கமாய் சிரித்தான்
''வெண்கல மகன்''

லக்ஷ்மி நகைக் கடையில் காத்திருந்து
சோகத்தில் சிரித்தான்
''தாமிர மகன் ''

சாரதாஸ் ஜவுளிக் கடையில் காத்திருந்து
சந்தோசத்தில் சிரித்தான்
'' உத்தம ராசன் ''

இங்கு நமக்கு கோவணத்
துணியாவது கிடைக்குமே'' என்று

யாருக்குதான் விளம்பரமோ ??/

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (22-Dec-14, 2:19 pm)
Tanglish : vilampara vasalil
பார்வை : 231

மேலே