ஆசைகள் பிறக்கும்

ஆசைகள் பிறக்கும்
ஆனாலும் இறக்கும்
இதயம்  சவமாகும் .

இன்பங்கள் தொடரும்
துன்பங்கள் இருக்கும்
விளைவு  நலமாகும் .

சொந்தங்கள் நடிக்கும்
கண்களை மறைக்கும்
பாசங்கள் போலியாகும் .

பாதங்கள் சிவக்கும்
முயற்சிகள் வருத்தும்
காலம் பதில் சொல்லும் .

உண்மை கசக்கும்
பின்பு பலிக்கும்
வாழ்க்கை சுகமாகும் !

எழுதியவர் : srihemalathaa.n (12-Apr-11, 4:21 pm)
சேர்த்தது : srihemalathaa.n
பார்வை : 410

மேலே