கனவில் வந்து கல்லால் அடிக்கிறார்கள்

எதையும் சொல்ல முடியாமலே
முடிகிறது எங்கள் கதை.

வெப்பத்தை கக்கும் காற்றில்
வெளிச்சத்தை தேடி நடக்கிறாள் அவள்.

இரவுகள் மட்டும்
உதிர்ந்தபடியே இருக்கின்றன.

இன்னும் எத்தனை இரவுகளோ?

வேதனையில் அவள் அழுகிறாள்...
வெந்த நிலையில் நான் சிரிக்கிறேன்...

கடந்த காலங்கள்
கசக்கிறது அவளுக்கு.

அவளை கடக்கும் காலமாவது
அவளுக்கு இனிக்கவெண்டுமென்பது எனக்கு.

நட்பின் தோணியில் நாகரிக
பயணம் செய்கிறோம் நாங்கள்.

கனவில் வந்து
கல்லால் அடிக்கிறார்கள்
காலசிறுவர்கள்.

எங்களுக்கே தெரியவில்லை
எங்களுக்காக,
நாங்கள் என்ன செய்வதென்று?

நா திறந்து
நலம் விசாரிக்கும் தொணியில்
ஏறெடுக்கிறேன்...

அள்ளி முகத்திலடிக்கிறது
அலைபேசியில்
அவள் சிந்திய கண்ணீர்.

யாருக்காக நான் வாழ வேண்டும்
என்கிற வேதனை அவளுக்கு.

எனக்காகவேனும் அவள்
வாழவேண்டும்
என்கிற யாசகம் எனக்கு.

பயணத்தின்
பாதையில் முட்கள் கிடக்கத்தான்
செய்யும்...

இவள் வாழ்வதே முட்கள் மீதென்றால்
நான் என்ன சொல்லி தேற்ற....

நா திறந்து
நலம் விசாரிக்கும் தொணியில்
ஏறெடுக்கிறேன்...

அள்ளி முகத்திலடிக்கிறது
அலைபேசியில்
அவள் சிந்திய கண்ணீர்.

எழுதியவர் : வரலாறு சுரேஷ் (22-Dec-14, 9:53 pm)
பார்வை : 68

மேலே