கனவிடுக்கின் வழியாக வருகிறாள் அவள்

கதவிடுக்கின் வழியாக வந்து விடுகிறது
காற்று...
கனவிடுக்கின் வழியாக வந்துவிடுகிறாள்
அவள்...
பிணந்தின்னிகள் நிறைந்த காடு என்
வாழ்க்கை,
பிறக்கவும் இல்லாது,
இறக்கவும் இயலாது,
எண்ணிய தூரம் வரை இறைந்தே கிடக்கிறது
மனம்.