கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்
ஏசுபிரான் எடுத்துரைத்த
ஆன்மநேயம் எத்தனையோ
இடர்களுக்கோர் மருந்தேயாகும் .
கூசாமல் மாடுகளின்
தொழுவம் தன்னில்
நமக்காக பிறப்பெடுத்தார்
இம்மண்ணின் மைந்தர் .
நேசத்தை விலங்கிடத்தும்
காட்டுகின்ற நன்னெறியை
நிலை நாட்ட தேசத்தை
நோக்கி இன்று
ஒளிக்கதிர் போல் வெளிச்சத்தை
காட்டுகின்ற பாலகனாய்
பிறப்பெடுத்தார் இறை இயேசு ...!!