என்னைப் படித்தால் உன்னைப் படிக்கும் உலகம் மூன்றாம் பகுதி

ஒரு வேளை உணவு உண்பவனின்
உணர்வு புரியுமா?
அவன் பசிக்கு உணவு கவிதானே
உணர்வு வரிகளில்தானே

கையூட்டு இல்லாமல்
காரியங்கள் நடக்குமா?
கையூட்டு இல்லாமல் எந்த காரியம் நடந்தது?
இறந்த பின் உடலைப் புதைக்க இது வேண்டுமே ....!

கைம்பெண் மறுமணம்
கட்டாயமாகுமா?
இதனை ஒழித்தவர் பெரியார்
அவர் தோன்றும் வரை ....!

விலையில்லாக் கல்வி
வீதியெங்கும் கிடைக்குமா?
இன்னொரு காமராஜர் உருவாகும் வரை ...!

வியர்வைத் துளிகளின்
வலிமை ஓங்குமா?
முதலாளி தொழிலாளி வயிற்றில் அடிக்கும் பொழுது ...!

வயதானால் பிள்ளைகளின்
பாசம் குறையுமா ?
முதியோர் இல்லம் என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால்
பாசம் இருந்திருக்கும்

வலைப்பூவில் மட்டுமே
நட்பு தொடருமா?
நட்புக்கு எல்லை ஏது?
நட்பு நமக்குப் பாடமாக
கர்ணனும் துரியோதனனும்
மறப்போமா..?

கடந்திட்ட பாதையின்
கால் தடம் அழியுமா?
நினைவுகள் மாறும் வரை
ஞாபகங்கள் மறக்கும் வரை
சில நாளில் கரை சேரலாம்
பல நாளில் சுவடுகளாகலாம்...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (23-Dec-14, 3:55 am)
பார்வை : 121

மேலே