என்னைப் படித்தால் உன்னைப் படிக்கும் உலகம் நிறைவுப் பகுதி

மறந்திட்ட தமிழரின்
தன் மானம் மலருமா?
உண்மைத் தமிழனாய் நீ மாறும் வரை எப்போது?
பல மொழிகள் பேசும்
நாடுகளில் வாழ்கின்ற போது
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல
இருந்தது அவனுக்கு
நம் நாட்டின் மொழி பேசும் மனிதன்
தன்னை சந்திக்கும் போது
கிடைத்திட்ட நட்பு
அப்போது மலர்ந்திடுமே உயிர்பூவாக ....!

மதங்களின் உண்மை
மனிதனுக்குப் புரியுமா?
நீ மதங்களை மதி
உன் மதங்களை அவன் மதிப்பான் ....
அப்போது உண்மை புரியும் ....!

மறுபடியும் மண்ணில்
மனிதம் மலருமா?
நீ மனிதனை மனிதனாய் மதிக்கும் பொழுது
மண்ணின் இயற்கையெல்லாம்
அதன் வழியே வேலைகளை செய்கின்றது
ஆப்பிள் பலாவாய் காய்ப்பதில்லை
மா கொய்யாவாகக் காய்ப்பதில்லை
கொய்யா வாழையாகக் காய்ப்பதில்லை
ஏன் நீ மட்டும் ?
மனிதனாக மாறு அப்போது
மனிதம் மலரும் ...!

நம்பிக்கை உள்ளவனின்
வாழ்வினி ஜெயிக்குமா?
நம்பிக்கையோடு காத்திருந்தால்
எல்லோருக்கும் இது புரியாத புதிர்
தோல்வியை விட்டு வெற்றியைப் பிடி
வாழ்க்கை இனிக்கும்
நம்பிக்கையும் தானே வரும் ....!

நாளைய உலகம்
நல்லதாய் உதிக்குமா?
ஆதவன் என்று புதிதாய் தோன்றினான்?
அன்றே ஒவ்வொரு உலகமும்
இரவும் பகலும் நமக்குப்
பாடம் கற்பிக்கின்றன
நல்லது எது கேட்டது எது என....!

அடிக்கடி அறிய
ஆசை மனதிற்கு ?
எல்லாம் தெரிந்த பின் ஆசை கொள்வோமா?

அறிந்த பின்
என்ன செய்வதாய் உத்தேசம்?
கவிஞன் எப்போது துயில் கொண்டான் ?
எப்போதும் கற்பனைக் கடலில் மிதக்கின்றவன்
சும்மாய் இருப்பானா?

எனது எழுதுகோலின் கேள்வி ...

1...மனிதன் இருக்கின்றானா?
அன்று சொன்னான் பாரதி
வங்கக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்னு
இப்போது என்ன மிதக்கிறது ? வேதனை கொடுமை
முதலில் கோழி பிறகு ஆடு ,மாடு ,பன்றி
இவைதான் உணவா? மனிதனுக்கு
எதுவும் மிஞ்சப் போவதில்லை
போகிறப் போக்கைப் பார்த்தால் மனிதன் உயிரும் மிஞ்சவில்லை
நாம் கொள்கிறோம் நம்மையும் கொல்கிறோம்...
கொடுமையிலும் கொடுமை ....

இன்னொரு கேள்வி எமக்கு ...
பெண்களைப் போற்றும் நாடு எது?
சமீபமாக எனக்குள் எழும் கேள்வி.....
இதற்கு பதில் கூறுங்கள் ....எனது பதிலும் உங்க வரிகளில்....

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (23-Dec-14, 4:26 am)
பார்வை : 143

மேலே