நாலு செண்ட் நிலம்

கால் சென்டரில் வேலை கிடைத்தும் வேண்டாம்னு சொல்லிட்டியா... ஏன்?" "எனக்கு முழு சென்டர்ல வேலை செய்யத்தான் ஆசை."

"வெளிநாட்டிலிருந்து உன் பையன் என்ன வாங்கி வந்தான்" "நாலு செண்ட் தான்" "ஏன்..ஒரு ஏக்கர் வாங்கிட்டு வரச் சொல்லி இருக்கலாமே..."

எதுக்கு ரத்த சம்பந்தமான புத்தகங்களை விழுந்து விழுந்து படிக்கறே?" "நாளைக்கு எனக்கு ப்ளட் டெஸ்ட்!

டாக்டர்... எனக்கு தூக்கத்துல நடக்கற வியாதி இருக்கறதால இங்க வந்துட்டேன்! நீங்க ஏன் இந்த அர்த்தராத்திரியில கிளினிக்கை திறந்து வச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கீங்க?" "எனக்கு தூக்கத்துல ட்ரீட்மெண்ட் பண்ற வியாதி இருக்குதே..!"

இளைஞர்களைக் கவரணும்னு தலைவர் இப்படியா பண்ணுவாரு...?" "என்ன செய்தாரு...?" "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மாணவ-மாணவியர்களின் அரியர்ஸையும் தள்ளுபடி செய்வோம்னு வாக்குறுதி கொடுத்திருக்காரு..

.எதுக்கு அந்த பேஷன்டோட கட்டிலுக்குக் கீழே பட்டாசைக் கொளுத்திப் போடறீங்க..?"
"நீங்கதானே டாக்டர், அவருக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கச் சொன்னீங்க.

எழுதியவர் : (23-Dec-14, 7:46 am)
சேர்த்தது : sathish
பார்வை : 136

சிறந்த நகைச்சுவைகள்

மேலே