தொடர்வண்டியாய் நான்
உனக்காக காத்திருக்கும் நான்
ஊரைப்பொருத்தவரை
அலங்காரப் பொருள் !
அமைதியாய் நிற்கிறேன் அந்த
தொடர்வண்டி நிலைய வாசலில்
தொடாமல் செல்கிறாய் நீ மட்டும் !
துரு பிடித்து நிற்கிறேன் உன் முகம் கொண்ட
பருக்களைப் போல !
எனக்கு மட்டும் ஆசை இருக்காதா
இப்படி நீ தொலைதூரம் நின்றால்
எப்படி முடியும் என்னால்
தொடர்வண்டியாக மாற !