புறக்கணிப்பில் எழுச்சி -சந்தோஷ்

ஒரு மழைத்துளிக்குள்
நூறு கவிதை
ஒளித்துவைத்திருக்கிறேன்.
எனக்கான கற்பனைவானில்
எப்பொழுதும் தப்பாமல்
கருவாகிறது சிந்தனைமுகில்கள்

எச்சரிக்கிறேன்...!

என் பிரசவத்தில்
உங்கள் பூகோளம்
மூழ்கிவிடக்கூடும்..!

---

நான் மாறுப்பட்டவன்
உங்களிலிருந்து வேறுப்பட்டவன்.

மூன்றாம் பிறைக்கு
நீங்கள் வர்ணனை
எழுததொடங்கும்போதே
நான்
பதின்மூன்றாம் பிறைக்கு
காவியம் எழுதி முடித்திடுவேன்.

என் வேகம்
புரவியின் கால்களில் ..
என் வீரம்
புலியின் நகத்தில்..
என் சாதுர்யம்
பூனையின் கண்களில்..
என் ஆக்ரோஷம்
மட்டும்
பாரதியின் மீசையில்..!


இப்பிரபஞ்சத்திலிருந்து
நான் ஒய்வுப்பெறும்
அத்தருணத்திலும்
என் பிணத்தில்.........
ஈக்களும் எறும்புகளும்
என்னுள் கவிதைகளை
தேடட்டும்... தேடும்..

அதுக்களுக்காவது......
இன்றே நான் சாதித்து
நாளையே செத்துவிட வேண்டும்..


ஓ...! மனிதர்களே..!
என் மரணித்தலாவது
என்னை வாசிப்பீர்களா
உங்கள் கண்ணீரால்...!!!!???

---------------------
-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார். (24-Dec-14, 11:14 am)
பார்வை : 90

மேலே