நெருங்கி வா முத்தமிடாதே
நெருங்கி வா முத்தமிடாதே
உன் கண்(விழி)மை
என் ஆண்மையை கற்பழிக்கிறது
நெருங்கி வா முத்தமிடாதே
உன் உதடு சாயம் பட்டு-நான்
உஜலாவுக்கு சவால் விட்டு விடுவேன்
நெருங்கி வா முத்தமிடாதே
ரோமாபுரி எரியும் போது பிடில் வாசித்தான் ஒருவன்-இன்று
என் கரங்களின் மேலுள்ள ரோமங்கள் சிலிர்த்து நடனம் ஆடுகிறன
நெருங்கி வா முத்தமிடாதே
புல்லின் மேல் படர்ந்து இருக்கும் பனித்துளி போல்
என் கன்னத்தின் மேல் உன் உதடுகள்
இப்போது புரிகிறது--இயற்கையின் தவிர்ப்பு
நெருங்கி வா முத்தமிடாதே
உன் வருகையில் என் வியர்வை துளிகள்
சுனாமியை மிஞ்சுகிறது செயற்கையில்
நெருங்கி வா முத்தமிடாதே
என் ஐம்புலன்களையும் அடக்கும்--ஒரு சப்தம்
உன் முத்தம்