என் காதல்
நிலவு வெட்கத்தோடு
எட்டி பார்க்க!
தென்றல் காற்று
மரங்களின் காதில் கவிதை பாட!
பறவைகள் தன இணையை
தேடி பாடி பறக்கும்,
கடல் அலைகள்
கடற்கரையை முத்தம் இடும்,
அழகான
மனதை மயக்கும்,
மாலை நேரம்!
என் காதலியின் அழகை
கவிதையாய் பாட,
காகிதத்தோடு அமர்ந்தேன்!!
காதலை காவியமாகி,
காதலியை நாயகியாக்கி,
கற்பனை உலகத்தில்
கற்பனை குதிரையில் பறந்தேன்!!
நிலவும் கண்டு வெட்கப்படும்
அவளின் அழகை பாட நினைத்தேன்!!
காந்தத்தை போல
காண்போரை ஈற்கும்
கண்களையும்,
பட்டாம் பூச்சியின்
சிறகை போன்று திறந்து மூடும்
இமைகளையும் ,
பற்றி கவி பாட நினைத்தேன் !!
காற்றில் ஆடும்
கார்மேகம் போன்ற கூந்தல்!
அந்த கூந்தல் மீதேறி
தன்னை அழகு படுத்திக்கொள்ளும்
பூக்கள்! ,
கூந்தல்கள் நடனம் ஆடும்
அழகிய நெற்றி! ,
நெற்றியில் தோன்றும்
நிலவு போன்ற பொட்டு!,
ஆப்பிள் போன்ற கன்னம்! ,
ஆரஞ்சு சுளை போன்ற உதடு! ,
அதில் என்றும் குடியிருக்கும்
புண்ணகை! ,
சிரித்தால் தோன்றும்
முத்து போன்ற பற்கள்! ,
இவை அனைத்தையும்
வர்ணிக்க நினைத்தேன்!!,
ஆனால்!!!,
இப்பொழுது தான் நினைவுக்கு வருகிறது!!!
எனக்கு காதலியே கிடையாது,
கவிதை பாடவும் தெரியாது என்று!!!...??????????!...