தடுமாறாதே

தாகித்த என் இதயத்தில்
தடும்மாறும் உன் உள்ளத்தில்
தவறாய் நான் வந்து
தாமத்தியம் தந்தேனே.

தவறாக எண்ணாமல்
தாராள மனதுடனே
தவறுகள் செய்து விட்டு
தப்பிக்க நினைப்பது.

தரம் கெட்ட வாழ்வல்லவா?
தடும்மாறும் வயதினிலே
தைரியம் இருந்து விட்டால்
தரமாக வாழ்ந்திடலாம்.

தவறுகள் செய்த பிறகு
தண்டனையாய் நம் அருகில்
தவிழும் மழலை கண்டு
தயக்கத்துடன் வாழ்வது ஏன்?

.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (24-Dec-14, 4:25 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 71

மேலே