எப்பொழுது
தாவணி தென்றலிலே !
சுகம் காணும் நெஞ்சங்களே .....
நாட்டில் நடமாடும்
தீமைகளை விரட்டுவது
எப்போது ?
தாவணி சுகத்தில்
தவறி - நீ
உறங்கி விட்டால்!
ஏடறிய ஏழைகளின்
வாழ்வுக்கு எற்றம்தான்
எப்பொழுது ?...........
அற்ப ஆசைகளை
கற்பனை செய்துகொண்டு
காலத்தை -நீ
கழிக்கின்றாய்......
பொன்னான ......
பொழுதுகளில் பெண்களை
துரத்திக்கொண்டு ....
பேயாய் அலைகின்றாய் !........
நல்ல பொழுதுகளில்
படித்தவர் -நாமே
உறங்கிவிட்டால்........
ஏடறியா?...ஏழைகளுக்கு
எற்றம்தான் ..........
எப்பொழுது ?........