கொடைமொழி வாழ்க
கொடைமொழி வாழ்க!
தேமதுரத் தமிழே திருக்குறள் தாயே!.
நாமண மொழியே பொதுமறை நீயே!
சேமத்தின் பொருளே செம்மொழி சிறப்பே!
கோபுரப் புகழே கொடைமொழி வாழ்க!
அன்னை தெரேசா உன் திருவடிவம்
உன்னை வரைந்தால் விண்ணவள் படிவம்.
அனாதை என்றே எவரிங்கு இருப்பார்
அரசின் தொட்டில் உறவென்று சிறப்பார்.
அன்னை தெரேசா உன் திருவடிவம்
உன்னை வரைந்தால் விண்ணவள் படிவம்..
பசியென்ற சொல்லை பழக்கத்தில் தொலைப்போம்.
விதியென்ற தொல்லை வறுமையும் அழிப்போம்.
தொடர்ந்தும் செம்மை ஆட்சியும் அமைப்போம்.
படர்ந்தும் திட்டம் போட்டதும் நிறைப்போம்.
பசியென்ற சொல்லை பழக்கத்தில் தொலைப்போம்.
விதியென்ற தொல்லை வறுமையும் அழிப்போம்.
மாறி மாறி ஆண்டும் மாறிடும்
ஆட்சி மாற்றம் ஆட்டம் முடியட்டும்.
தேறும் தூரம் தூர்ந்தும் தீரட்டும்
வீழ்ச்சி நேர்வதும் வீழ்ந்தும் தேரட்டும்.!
மாறி மாறி ஆண்டு மாறிடும்
ஆட்சி மாற்றம் ஆட்டம் முடியட்டும்..
கட்டும் தமிழகம் கட்டி நிறைப்போம்.
முட்டும் முரண்களை கொட்டி விரட்டுவோம்.
செம்மார் கரங்களில் நம்பிக் கொடுப்போம்.
நம்மா நிலம்பார் செம்மா நிலாமாம்
கட்டும் தமிழகம் கட்டி நிறைப்போம்..
முட்டும் முரண்களை கொட்டி விரட்டுவோம்..
தேமதுரத் தமிழே திருக்குறள் தாயே!.
நாமண மொழியே பொதுமறை நீயே!
சேமத்தின் பொருளே செம்மொழி சிறப்பே!
கோபுரப் புகழே கொடைமொழி வாழ்க!
கொ.பெ.பி.அய்யா.