தாக்கதயாராகு--- குமரேசன் கிருஷ்ணன்

தாக்க......தயாராகு
--------------------------------

வில்லில் பூட்டிய
அம்பு நீ..

இலக்கு அறிந்து
தாக்க.....தயாராகு

சலனமில்லா
தெளிந்த நீராயிரு

கண்ணாடிபுகும்
கலையை அறி

காகிதம் எரிக்கும்
சுடராய் இரு

குவியலின்
ஈர்ப்பு உணர் ..

நிஜங்களை மட்டுமே
பிரதிபலி ..

தோலுரிக்கும் பாம்புகளே
உன்னை சுற்றி ..

உன் விஷம் முறிக்க
கீரிகளுக்கு நேரமில்லை

உறக்கம் களை
உணர்வுகள் மதி ..

கோபம் தவிர்
யோகம் பயில்...

தோல்வியில்
துவளாதே..

வேகம் கொள்
வெற்றி நோக்கி

காலச்சுழலின் ...
கணக்குகள் புரியும்போது

ஈர்ப்பாய்...
வெற்றியின் விலாசத்தை ..

ஆதலால்
தாக்க....தயாராகு

உன் இலக்கு
உன் கையில்

ஏன் இந்த தயக்கம்
வில்விட்டு விடைபெற

நீ...
சீறிப்பாய்கையில்
தடையாய் நிற்க
வேறுயாருண்டு
உன்னைத்தவிர..!
---------------------------------------
( மறு பதிவு --குமரேசன் கிருஷ்ணன் )

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (24-Dec-14, 4:27 pm)
பார்வை : 183

மேலே