என் காதல் சக்கரம்
ஒவ்வொரு விடியலிலும்
உன் பார்வையில் புதிதாய் பிறக்கிறேன்
ஒவ்வொரு இரவிலும்
உன் கற்பனையில் தவழ்ந்து
என் விழி வாசலில் உன் வருகைக்காக காத்திருந்து
இமை மூடா கனவினில் மிதக்கிறேன்
இடைப்பட்ட நேரங்களில்
உன் நினைவுகளை சுமந்தபடியே
ஏதாவது ஒரு ஜென்மத்தில்
உன் காதலுக்கு உரியவனாய்
என்னை நீ அடையாளப்படுத்திக்கொள்ள
சம்மதிப்பாய் என்ற நம்பிக்கையில் தான்
சுழல்கின்றது என் காதல் சக்கரம்!!!