நிறைகுடம்

அது ஒரு ஏப்ரல் மாத பெங்களூர் . வருடம் 2009 .
பெங்களுரும் 100 டிகிரி தொடுகிறது எப்ரல்களில் சமீப வருடங்களில்...
அதுவும் அந்த ஏப்ரல் ஏனோ இன்னும் வெப்பமாக இருந்தது .

நான் IIM ( Indian Institute of Management ) பெங்களூரில் ஒரு management
course க்காக சேர்ந்திருந்தேன்.
கொஞ்சம் கட்டணங்கள் அதிகம் ...கட்டுப்பாடுகளும் அதிகம் .

மாணவர்கள் மாதிரி அங்கேயே தங்க வேண்டும் .அவர்கள் சாப்பிடும் உணவுதான் .
அறைகளில் டிவி , AC எல்லாம் கிடையாது மின்விசிறி மட்டும் இருக்கும் .
.மது , சிகரட் எதுவும் பிடிக்க கூடாது .என் பிசினெஸ் க்காக மறுபடியும் அங்கு படிக்க சென்றேன் 2011 , பிறகு 2012 ல் .
நிறைய கற்றேன்.

2011 ல் ஒரு விருது கூட வாங்கினேன் வணிகம் சம்பந்தமாக .
ஆனால் நான் முதலில் சொன்ன அந்த 2009 ஏப்ரலில் அங்கு ஒரு சினிமாக்காரன் வந்தான் சம்பந்தம் இல்லாமல் .
படம் எடுக்க வந்தான் என தெரிந்து கொண்டோம் .

ஏனோ அவனுக்கு அந்த இடம் பிடித்து ஹாஸ்டலிலேயே தங்கி விட்டான் . அவனுக்கும் AC , டிவி எதுவும் கிடையாது .
படம் முடியும் வரை அங்கேயே தங்கி இருந்தான் . மாணவர்களோடு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசுவான் . பாடுவான் . விளையாடுவான் .அங்கிருக்கும் மாணவர்கள் அவன் படம் முடித்து சென்ற போது அவனை தனக்குள் ஒருவனாக நினைத்து அழுத படியே ஆட்டோ கிராப் வாங்கினர் .

அவனும் கண் கலங்கினான் .உடைந்தான் .அந்த கல்லூரி மண்ணை தொட்டு வணங்கினான் . விடை பெற்றான் .

அவன் அப்போது நிறைய சிகரட் பிடிப்பான் . படபிடிப்பு கல்லூரி வளாகத்தில் நடக்கும் .தீடிரென்று சிகரட் எடுப்பான் .
ஒரு கிலோ மீட்டர் தூரம் ..காரிலோ, .மாணவர்கள் எவரேனும் வாகனத்தில் வரின் அதில் லிப்ட் கேட்டோ , சில சமயம் நடந்தோ கேட் கடந்து வெளியே சென்று புகைத்து விட்டு வருவான் .

எதிரே யார் வந்தாலும் வணக்கம் சொல்வான் .
அங்கிருக்கும் நிறைய மாணவர்களும் , என்னை போல் வெளியில் இருந்து சென்ற அனைவரும் அவனின் எளிமை கண்டு வியந்தோம் .அவனும் ஒரு பாடமாய் எங்களுக்கு அமைந்தான் அந்த வளாகத்தில் ....

இன்று அவனை திரையில் பார்த்தேன் . அந்த 2009 ஏப்ரல் , பெங்களூர் , IIM , அவன் எளிமை , பணிவு எல்லாம் நினைவில் வந்தது .

அந்த ஏப்ரல் 2009 , பெங்களூர் , IIM ல் அவன் தங்கி எடுத்த படம் - 3 IDIOTS .
இன்று அவனை திரையில் பார்த்த படம் - P K

அந்த எளிமையான , பணிவான அவன் - ஆமிர் கான் .

எழுதியவர் : ராம்வசந்த் (24-Dec-14, 10:53 pm)
பார்வை : 342

மேலே