எப்போது
பொழுது விடியும் முன்னரே,
என்னில் பிரகாசிக்கும் விடி வெள்ளி - நீ!
இருள் மெல்லக் கலைய,
எனக்குள் கதிர்விடும் பரிதி - நீ!
கரையும் நிமிஷங்களிலெ(ல்)லாம்
என்னில் நிறைந்திருக்கும் உயிர் - நீ!
மாலை மயங்கி மறைந்திட,
என்னில் உதித்திடும் வெண்ணிலவு - நீ!
படுக்கையில் சிரம்,
சாய்ந்திடும் தருணமும்
என்னில் தலைதூக்கி நிற்கும் உறவு - நீ!
எனை மறந்து,
துயில்கொ(ள்)ளும் போதெ(ல்)லாம்
என் கனவுக்குள் பவனி வரும் காதல் - நீ!!!
உயிருக்கும் மேலாக
உன் மீது அன்பு கொண்ட,
எனக்குப் புரியவில்லை அன்பே..,
உ(ன்)னை துடிக்க வைக்கும்
அளவிற்கு - என் அன்பு,
விஷமாகிப் போனது எப்போதென்று!!!