வாழ்க்கைத் தத்துவம்

1, " டவர் இல்லாத செல்லும்
பவர் இல்லாத சொல்லும்" - பயன் தராது

2. வக்கீலுக்கு படிச்சுட்டு டாக்டர் ஆக முடியாது.
வாழ்க்கையில தோத்துட்டு டாப்பர் ஆக முடியாது.

3, சத்து போன உடலும்
சொத்து போன கிழடும் - சொந்தமா செயல்பட முடியாது.

4, பஞ்சர் ஆயிட்ட டயருக்குள்ளும்
ஜிஞ்சர் சாப்பிட்ட குடலுக்குள்ளும்- காத்து தங்காது.

5, உப்பை குறை உடலுக்கு நல்லது.
, தப்பை குறை உள்ளத்துக்கு நல்லது.

6. வழுக்கையான தேங்காயில குடுமி இருக்கும்
வழுக்கையான தலையில குடுமி இருக்குமா?

7. ஆட்டோல போனாலும் ALTOல போனாலும்
இறங்க வேண்டிய இடத்துல இறங்கித்தான் ஆகணும்.

8. GUARD பச்சை கொடி கட்டினா TRAIN அவரை விட்டு போகும்
GOD பச்சை கொடி கட்டினா TRAIN அவரை நோக்கி போகும்.

9. தண்டவாளம் தனித்தனியா செல்லும்
வண்டவாளம் கதைகதையாச் சொல்லும்.

.

எழுதியவர் : ந. அலாவுதீன் (25-Dec-14, 11:26 am)
பார்வை : 203

மேலே