என் காதலி ஒரு ஹைக்கூ கவிதை

என் காதலி..
புதுமைப் பெண் மட்டுமல்ல..
ஒரு
ஹைக்கூ கவிதையும் கூட ! ..
சொல்வது குறைவாகவும்
பொருள் கொள்வது
அவரவர் தரத்திற்கும்
அறிவிற்கும்
ஏற்றவாறு
புரிந்து கொள்ளப்படும்
வகையில்
தோன்றிய
ஜப்பானிய கவிதை வகைதானே
ஹைக்கூ..!
தமிழில் முதன் முதலில்
ஹைக்கூ படைத்த மகா கவியும்
ஏற்றுக்க கொண்டு எழுதி மகிழ்ந்ததன்றோ
ஹைக்கூ..
வயதானாலும்
பாரதிதாசனும் எழுதி மகிந்ததன்றோ..
அழகின் சிரிப்பும் ஹைக்கூ கவிதையும் ..
அதனால் ..
என் காதலி..
புதுமைப் பெண் மட்டுமல்ல..
ஒரு
ஹைக்கூ கவிதையும் கூட ! ..

எழுதியவர் : கருணா (26-Dec-14, 4:36 pm)
பார்வை : 205

மேலே