உனக்காகதா புள்ள
எத்தனை வேறுபாடு எங்களுக்குள்
அமர்ந்த இருக்கையில் உலகை சுற்றுபவள் அவள்
இருக்கையில் அமர்ந்து உலகை சுற்றுபவன் நான்
சூடிய மலரும் வடாது அவள் மாலை திரும்பையில்
சுருட்டிய காகிதம்போல் இருக்கும் நான் மாலை திரும்பையில்
சத்தம் இல்லாமல் இயங்கும் அவள் ஆய்வுக்கூடம்
சத்தம் இல்லாமல் இயங்காது என் ஆய்வுக்கூடம்
தட்டி தட்டி வேலை பார்ப்பவள் அவள்
தட்டி தட்டி வேலை செய்பவன் நான்
விடுமுறையில் வேலை பார்ப்பவள் அவள்
வீட்டு முறையிலும் வேலை பார்ப்பவன் நான்
படைப்புக்களை வரையும் ஓவியர் நீ
உன் ஓவியத்திற்கு வடிவம் கொடுப்பவன் நான்
circuitil சுழலுபவள் நீ
சக்கரத்தில் சுழலுபவன் நான்
மென்பொருளில் நுண்பொருள் அவள்
இயந்திரத்தின் இதயம் நான்
இன்றுவரை இணைந்தே இருக்கிறோம்
இருவரி கவிதையாக
புரியும்படியா சொல்லனும்னா
பொண்ணு IT
பையன் mechanical
(circuit தமிழாக்கம் தெரிந்தால் சொல்லவும் )