அறியாமல் வந்த காதல்

பாதை வளைவை கடந்து
வருகையில் அங்கே ஏதோ
ஒன்று விழுந்து விட்டதாய்
ஒரு எண்ணம்

மீண்டும் வந்து விழுந்தது
எது எனத் தேடுகையில்
ஒரு பெண்ணின் காலடியில்
என் இதயம்

இதுவரை எதற்கும்
தொலைக்காத என் இதயத்தை
என்னை அறியாமலே ஒரு
பெண்ணிடம் தொலைத்து
விட்டேன்

அங்கிருந்து இதயத்தை
எடுத்து வந்தாலும் என்
இதயமும் எண்ணங்களும்
அவளை நோக்கியே பறக்க
முனைகிறது

இந்த அவஸ்தையை காதல்
என ஏற்கவும் மனமில்லை
விட்டு விடவும் பிடிக்கவில்லை
எனினும் அந்த அவஸ்தையில்
ஒரு புரியாத இன்பம்

அன்றிரவு கனவில்
அவள் வெவ்வேறு உடைகளில்
என் முன் தோன்றினாள்
என்ன கொடுமை இது
அவள் எப்படி கனவில்
வந்தாள்

கண் விழித்து சிந்திக்கையில்
இதயத்தின் ஓரத்தில் ஒரு
சிறு ஓசை
காது கொடுத்து கேட்டேன்
லப்டப் எனும் துடிப்பு
காதல் என துடித்தது

எழுதியவர் : fasrina (26-Dec-14, 10:43 pm)
பார்வை : 94

மேலே