மழைச்சாரலுடன் மரணம் சிக்னலில் - புரியாத

வெள்ளை அமைதி நிலா ஊர்வலமா..,?
கருப்பு பூனை பொது கூட்டமும் இல்லை.,!
ஆனால் வண்ணமுள்ள பட்டாம்பூச்சி இதயங்கள்
நேசமுடன் ஒன்றாய் நிற்பதை கண்டேன்-ஒருமைபாடோ.!
அருவி போல ஒன்றாய் துடிப்பதை கண்டேன்
குழந்தை ரோஜா ஒன்று ஏக்கமுடன்
முல்லை முயல் போல சிரித்த போது...!
மாமா போ என முந்தானையில் முட்ட..!
புல்வெளி வழி விட்டு
இதய துடிப்புகள் ஒன்றாய் நடப்பதை பாரேன்,!
வானவில் வழியில் நெருக்கம் ஓடுவதை கண்டேன்,!
மௌனம் நின்றது போல் சட்டென்று நின்றதே பாதி,,!
இலை தலை சாய்க்குமென கண் பார்க்க
சட்டென்று சொட் சில்லென்று சில்லென்று வானம் சிரிக்க
மழை நனைக்கிறதே தாய்பால் போல்,,!
அலைகள் சொந்தம் தேடி ஓடியபோது
பூமி புத்தம் புதிதாய் மாறுவதை பாருங்களேன்,,!
இமைகள் நனைந்து விழி வழி பார்க்க
ஏங்க,, ஏங்க,, நேரம் கூட, கூட,,!
ரணம் குலைய ஆடிக்கொண்டு தன்போக்கில் ஒரு கருடன்,?
சட்டென்று அடிக்க மனித கோலிக்கூட்டம் சிதைந்ததே..,,
ஐயோ,,! அம்மா,,! பல இதய நரம்புகள் துடிப்பதை.,?
கடவுளே,,! ரணங்கள் கொதிப்பதை தடுப்பேனா,,?
யோ,,? எமனே காத்திருந்தாயோ சிக்னலில்,,?
ஐயோ,,! போறாங்களே,. போறாங்களே,, உயிரை விட்டு
கண்முன் கண்கள் மூடி விண் போனார்களே
மனித கூட்டம் சுற்றி ஆதங்கம் அரங்கேற.,?
எங்கே,? எப்படி.? யார்.? யாரை.? காப்பேன் இனி,?
காத்திருத காலான் விளக்கு கிரகணம் தீண்டி
பச்சை பௌர்ணமி உதயமானதே
வாகனத்தில் மின்னலுடன் விண்மீன் கூட்டம் சிதறுதே
அவர் அவர் வாசல் வாசம் தேடி..
என்னாலே தன்னாலே உளறிக்கொண்டேன்
மனசாட்சி தொலைத்து எண்ணம் சுற்ற
என் டிராபிக் போலீஸ் வேலையை பார்க்கிறேன்
என் பொன் மான்களே..!!
நீங்கள் சிறுத்தையாய் சிக்னலில் சீரிபாயாமல்
பொறுமையாய் காதல் கொள்ளுங்கள் சிக்னல் பெண் மேல்,,
ரைட்,, ரைட்,,போங்க,,, போங்க ,,,
((
இனியாவது டிராபிக் சிக்னலில் பொருமைவுடன்
பொறுத்திருந்து வாகனத்தை ஓட்டுவோம்..??
))
- சக்திவேல்