உயிருள்ள இயந்திரங்கள்
நடந்து பாரு கால்களும் உண்டு
நினைத்துப் பாரு நல்லெண்ணம் உண்டு..... !!
இருதயம் இருப்பதை பிறர்
இயம்பவும் வேண்டுமோ ? இந்த
இயந்திர உலகத்தில் மெய்
இன்பமும் தோன்றுமோ ?
மனிதர்கள் எங்கே ?
மனிதர்கள் எங்கே ?
தனித் தனியாக - செல் போன் சிறையில்
தனித் தனியாக - செல் போன் சிறையில்
தன்னை மறந்தே மகிழ்கின்றார் - பலர்
தாயின் உறவையும் மறக்கின்றார் - இவர்களுக்கு
இருதயம் இருப்பதை பிறர்
இயம்பவும் வேண்டுமோ ? இந்த
இயந்திர உலகத்தில் மெய்
இன்பமும் தோன்றுமோ ?