பருவங்கள்

குழந்தை
வானமும் பூமியும் இரண்டும்கலந்த
வழியும்அழகு வடிவிலிருப்பான் ..!
காயம் பயம் கண்ணில்கண்டும்
காரணமேதும் அறியாதிருப்பான்..!

சிறுவர்
சொல்லச் சொல்ல கிளியைபோல,
வெல்லக்கட்டி மொழியில் சிரிப்பான்..!
கல்விக்கூடம் சொல்லும்பாடம்
கேட்க இனிக்கும் தமிழின் ஆழம் ..!

இளமை
அழகும் அறிவும் கண்ணில்தோன்றி
அலையவைக்கும் காதல்பருவம்..
பக்குவமென்றால் பட்டம்வெல்லும்
பாதியில்போனால் பைத்தியமாகும்.!

கடமை:
முரண்டுபிடிக்கும் காரியமெல்லாம்
முன்பின்பார்த்து மூளைசெய்யும்
உறவுகளென்று சூழ்நிலைநடுவில்
உரசல்களில்லா நிம்மதிதேடும் ..

முதுமை (மழலை)
அனுபவமென்னும் அறிவைக்கடந்து
அரைகுறைவயிற்றில் பசியைசுமந்து
பெற்றப்பிள்ளையின் மழலைகள்தேடும்
பாசத்தின் மதிப்போ எத்தனைக்கோடி..!

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜெ (28-Dec-14, 2:58 pm)
பார்வை : 97

மேலே