கவிதைக்கு ஒரு கவிதை
கவிதைக்கு வாய் இருக்காது
ஆனால் பேசிக்கொண்டு இருக்கும்
கவிதைக்கு கண் இருக்காது
ஆனால் பார்த்து கொண்டு இருக்கும்
கவிதைக்கு கால் இருக்காது
உலகம் முழுதும் நடந்து கொண்டு இருக்கும்
கவிதைக்கு உதடு இருக்காது
ஆனால் சிரித்துக்கொண்டு இருக்கும்
கவிதைக்கு உருவம் இருக்காது
மனித மனம் ரசித்துக்கொண்டு இருக்கும்
கவிதைக்கு மனம் இருக்காது
ஆனால் பாவம் பார்க்கும்
கவிதைக்கு இறகு இருக்காது
வானம் தாண்டி பறந்து கொண்டு இருக்கும்
கவிதைக்கு முகவரி இருக்காது
ஆனால் கவிஞ்சன்க்கு முகவரி கொடுக்கும்
கவிதைக்கு பாதை இருக்காது
ஆனால் அதன் பயணம் தொடராகவே இருக்கும்
கவிதைக்கு விலை இருக்காது
ஆனால் மதிப்பு இருந்து கொண்டு இருக்கும்
கவிதைக்கு காதல் இருக்காது
காதல் கவி மட்டும் ஒலித்து கொண்டு இருக்கும்
சொல்ல போனால் கவிதை
இருந்தும் இல்லாதது
இறந்தும் இறக்காதது
அறிந்தும் அறியாதது