தாகம்
"தாகம்"
அறிவைத் தேடியவன் ...
அழிவில் போகிறான
கழிவைத் தேடியவன்
கலையால் வாழ்கிறான்..
மனிதத்தின் ஆதாரம்
மந்தியெனும் உருவில்
சமூகத்தின் விதியால்
சாக்கடையை நாடி..
தாகத்தை தீர்த்துவிட
தண்ணீரின் அவசியத்தை
அவனறிவால் சொல்லிவிட
ஆறறிவாய் நிற்கின்றான்..!