உணவு
உயிரின உத்தரவாதம் உணவென்றால்
உபரியாய் வீணாக்குவதேன்!
உணவை செரிப்பது
உடல் உறுதிக்கா இல்லை பருமனுக்கா!
நோயின் பிடியில் நாயாய்
வேதனை ஏன்!
நாவின் சுவையாய்!
நலத்தின் பகையாய்!
உண்ணும் உபரி
உபத்திரவ நஞ்சாய்!
உடலின் கொழுப்பாய்!
உழைப்புக்கேற்ற உணவாய்
களைப்புக்கேற்ற சக்தியான
உணவே சாஸ்வதம்! தேவாமிர்தம்!
உண்டு களித்திட!
உழைத்து பிழைத்திடு இல்லை
ஆடி களைத்திடு இல்லை
உணவை தவிர்த்திடு!
உண்டு உறங்கி
உபத்திரவமாய் உயிர் கொள்ளாதே!
உயிரைக் கொல்லாதே!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
