சோதனையில் சிக்கிவிட்டான் சொக்கியவன்
![](https://eluthu.com/images/loading.gif)
"சொக்கிவிட்டான் சோதனையில்"
சேலைக்கு நூலொன்றை
சேர்க்கின்ற வாழ்க்கைக்கு
காதுக்குள் துளைபோட்டு
காப்பாற்றும் ஊசியவன்
சோலையின் சுகமொன்றில்
சொக்கித்தான் போனானோ
தலைகீழாய் மாற்றியவன்
தாவரத்தில் உயிர்விட்டு...
அழகான சேர்க்கைக்கு
அவனென்றும் கில்லாடி
ஆண்டவனின் படைப்புக்கு
அவனேதான் முன்னோடி...