கருமை-அழகு

"கருமை - அழகு"

நிழல்தங்க நீரோட..
நிறம்மாறிப் போகின்றாள்..
கண்ணுக்கு மையிட்டு
கரும்பாறைத் தானாடி..

சத்தங்கள் இல்லாத
யுத்தத்தில் அவள்கூட
கருங்கூந்தல் தோகையுள்
கதிரவனை பூட்டித்தான் .!

விழுந்தாலும் சுகம்
விரிந்தாடும் முகம்..
அழகான மனம்
அழைத்தாலே தினம்

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜெ (29-Dec-14, 9:12 am)
சேர்த்தது : ஜெபீ ஜாக்
பார்வை : 158

மேலே