எத்தனையாவது காதலன் நான்
![](https://eluthu.com/images/loading.gif)
கவிதையாய் வந்த என்னை
கரை படுத்தி விட்டாயடி
கரை பட்ட மனம் உன்னை
காதல் செய்ய தோணுதடி..
கற்பனையில் நீ இருந்து
கனவிலே நீ வந்து
கண்ணுறங்க முடியாமல்
கசமுசா பண்ணுதடி.
காரியம் முடிந்து விட்டால்
கை கழுவி விட்டு விட்டு
காதலே வேண்டாமுன்னு
கண்டிப்பாய் சொல்வாயடி..
உன்னை போல் காதலியை
கணக்கில்லாமல் கண்டேனடி
பத்தோடு பதின்னோன்றாய்
நீயும் ஆகாதடி..