நீலக்குயில் தேசம்18---ப்ரியா
ராகேஷும் கயலும் தனியே சந்தித்து பேச கயலின் கைகளைப்பற்றி அழுதுகொண்டிருந்தான் ராகேஷ்......ஏய் என்னடா ஆச்சி...... ஏன் அழறா? எல்லாரும் பார்க்கிறாங்க என்று அவனைத்தேற்றினாள் அவன் கைகளை பிடித்துக்கொண்டு..................அந்த சமயம் கயலிடம் தன் காதலை சொல்லி அவமானமடைந்த அந்த டிரெயினிங் ஆசிரியர் இங்கு நடந்த அனைத்தையும் பின்புற இருக்கையில் அமர்ந்து பார்த்து மனதிற்குள் பொறாமைத்தீஈ பற்றியெரிய கொந்தளித்துக்கொண்டிருந்தான்..........!
இனி 20 நாட்கள் உன்னைப்பார்க்காமல் எப்படி இருக்கப்போகிறேன் என்றே தெரியவில்லைக்கயல் என்று மறுபடியும் அழ ஆரம்பித்தான் அப்பொழுதுதான் கயலுக்கு அந்த உணர்வு ஏற்பட்டது இவ்வளவு நாட்களும் அவன் பக்கத்திலேயே இருந்துவிட்டு இனி எப்படி இவ்ளோ நாள் என்று அவளாலும் ஜீரணிக்கமுடியவில்லை ஆனால் அவள் மனதிலிருந்ததை வெளிக்காட்டிக்கொள்ளாமல்......என்னடா இனி என்னப்பண்ணமுடியும் இந்த பிரிவும் ஒருவித சுகமான சுமைதான் என பெண்களுக்கே உண்டான பெருந்தன்மையுடன் அவள் சொல்லி அவனைத்தேற்றினாள்......அவள் வாயால் இப்படி சொல்லியிருந்தாலும் கண்களில் அந்த பிரிவின் வலி தெரிவதை இவனும் அறியாமல் இல்லை இருந்தும் அந்நேர அவளது ஆறுதலான வார்த்தை அவனுக்கு தெம்பேற்றியது.....பேசிப்பேசி நேரம் போனதே தெரியவில்லை கிளம்பலாமா?வீட்டுலப்போய் கால்பண்றேன் எனக்கயல் சொல்ல அப்போதுதான் அவன் சுயநினைவுக்கே வந்தான்.
சரி வா கிளம்பலாம் என இருவரும் அந்த இடத்தைவிட்டு நகரும் போது......அந்த டிரெயினிங் ஆசிரியர் கோவமாய் இவர்களை முறைத்துப்பார்த்துக்கொண்டிருப்பதைக்கவனித்தான்.
இவன் ஏன் நம்மை இப்படி விழுங்கும் பார்வைப்பார்க்கிறான் என ஒருநிமிடம் யோசித்த ராகேஷ் கயலிடம்....."ஏய் கயல் அசோக் நம்மளயே முறைத்தமாதிரி பார்த்துட்டிருந்தான் பார்த்தியா" என்று கேட்டான்...?
அசோக்கா?யாரது எனக்கு தெரியாதே என்று புரியாமல் கேட்டாள் கயல்?
அன்னிக்கு நாம சர்ச்ல இருக்கும் போது உன்னை அழைத்துப்பேசினாரே அந்த டிரெய்னிங் ஆசிரியர் அவர்தான் என்றான்.
ஓ அவரா?அவர் பெயர்தான் அசோக்கா? எங்க இருந்தாரு காபி ஷாப்லயா? நான் பார்க்கல ஆமா அவரு எதுக்கு நம்மள முறைக்கணும் சும்மா பார்த்திருப்பாரு.........என்று கயல் புரியாதது போல் பதிலளித்தாள்.
ஆனால் அவள் மனதிற்குள்........எப்படியோ நம்ம காதல் விஷயத்த நாம சொல்லாமலேயே அவனே தெரிஞ்சிக்கிட்டான் என்று சந்தோஷப்பட்டுக்கொண்டாள்...(அவனால் இனி வரும் பிரச்சனைகளை அவள் அறிய வாய்ப்பில்லை) .....?????
அரவிந்த்,திவ்யா மற்றும் கயல்விழி ராகேஷ் இவர்களின் காதல் விஷயம் அவர்கள் கல்லூரியில் அனைவரும் அறிந்திருந்த ஒன்றாகவே இருந்தது.
வீட்டிற்கு வந்த கயல் அழுதே விட்டாள்........எப்படி இவ்வளவு நாட்கள் அவனைப்பிரிந்து இருக்க முடியும் பக்கத்திலேயே இருந்தவன் இப்பொழுது வெகு தூரமாய் இருப்பதைப்போன்ற ஒரு உணர்வு.
அப்பொழுது கயலின் போன் சிணுங்கியது.....ராஜலெட்சுமி அத்தையின் வீட்டிலிருந்துதான் கால் வந்தது தாத்தாவிற்கு தெரியாமல் மொட்டைமாடிக்கு சென்று பேச ஆரம்பித்தாள்........வழக்கமாக அத்தைதான் முதலில் பேசுவார்கள் அதன்பிறகு ப்ரியா பேசுவாள் ஆனால் இன்று முதலிலேயே ப்ரியாதான் பேசினாள்.......தாத்தாப்பாட்டி கல்லூரி விஷயங்கள் என அனைத்து பேசிப்பேசி நேரம் போனதே தெரியவில்லை.......தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு மேல் பேசிட்டோம் இன்னும் அத்தை பேசவில்லை ஏனென்று புரியவில்லை கயலுக்கு........கேட்டுவிடலாமா என நினைத்தவள்"அத்தை எங்கே ஆளக்காணோம்"என்று கேட்டும் விட்டாள்........!
ஓ நீங்க அத்தைக்கிட்ட மட்டும்தான் பேசுவீங்களா? நாங்கெல்லாம் பேசினா பேசமாட்டீங்களா?என்று வேணும்னே கயலை வம்பிழுத்தாள்......
ஏய் அப்டி ஒன்றுமில்லை அத்தைதான் என்னிக்குமே முதலில் பேசுவாங்க அதான் கேட்டேன் என்றாள் கயல்.
அம்மா உங்கக்கிட்ட அந்த விஷயத்த பற்றி சொல்லவே இல்லியா என புதிர் போட்டாள் ப்ரியதர்ஷினி........இல்லியே அத்த என்கிட்ட எதுவும் சொல்லல என்ன விஷயம்?எனக்கேட்டாள் கயல்.....???
இன்னிக்கு என் அண்ணன் வேலை முடிச்சிட்டு ஒருவாரம் லீவு போட்டுட்டு எங்ககூட இருக்கப்போறான் அவன கூப்பிடதான் அம்மா போயிருக்காங்க எனக்கும் இப்போ விடுமுறைதான் நாங்க அண்ணன் வந்ததும் டூர் போகப்போறோம் நீயும் வாயேன் என்று சந்தோஷமாய் சொன்னாள் ப்ரியா......
ஐயயோ நானா அவ்ளோ தூரம் இப்போ முடியாதுப்பா தாத்தாவின் பிடிவாதத்ததான் முதலில் மாற்றணும் அப்புறம்தான் உங்க இடத்துக்கே வரமுடியும் என்று அழுத்தமாக சொன்னாள் கயல்.....!
எனக்கு உங்கள எல்லாம் எப்போ பார்ப்பேன்னு ஆசையா இருக்குது........சரி அம்மா வந்ததும் பேச சொல்றேன் வைக்கட்டுமா என்றவள் உடனே
வைத்துவிட்டாள்.
கயலுக்கும் அவள் அம்மாவுக்கும் அத்தை வீட்டுக்கு போக ஆசைதான் ஆனால் என்ன பண்றது முடிவு எல்லாம் தாத்தா கைலதானே என நினைத்தவள் ஒரு பெருமூச்சுவிட்டுவிட்டு கீழே வந்தாள்.
தாயிடம் ப்ரியதர்ஷினி பேசிய விஷயத்தை சொன்னாள் கயல்.......சுசீலாவுக்கும் அவர்களிடம் பேசவேண்டும் என்ற ஆசை வந்தது அடுத்ததடவை பேசும் போது என்னிடம் கொடு நானும் பேசுறேன் என கயலின் தாய் சொல்ல கயலுக்கோ எல்லையில்லா ஆனந்தம்....சரிமா இரவு பேசலாம் என்று சொல்லிவிட்டு வழக்கம் போல் ராகேஷுடன் மெசேஜ் மூலம் பேசிக்கொண்டிருந்தாள்......!
இரவு தூங்கப்போகும் போதுதான் கயலுக்கு நினைவு வந்தது.........உடனே தன் அத்தை வீட்டுக்கு கால்பண்ணினாள் அத்தை எடுத்து பேசினார்கள் தன் மகனை அழைத்து வர சென்றேன் என்று கயலிடம் சொன்னவர் இந்தா போனை அவனிடம் தரேன் பேசு என்று கொடுக்க போக வேணாம் அத்தை நான் அப்புறமா பேசுறேன் என்னோட அம்மா உங்கக்கிட்ட பேசணுமாம் பேசுங்கள் என்று சுசீலாவிடம் செல்போனை கொடுத்தாள் கயல்............ ராஜலெட்சுமி, சுசீலா இருவரும் பிரிந்தது முதல் இன்றுவரை உள்ள அனைத்தையும் பேச........அங்கிருந்து ப்ரியதர்ஷினியோ அம்மா போதும் போதும் அண்ணன் பாவம் கயல்கிட்ட ஒருதடவை பேசட்டும் கொடுங்க என்று அண்ணன் மதனை கலாய்த்துக்கொண்டிருந்தாள் ப்ரியா.......!
தங்கையின் கிண்டலை புரிந்துகொண்ட மதன் நான் பேசலம்மா நீங்களே பேசுங்கள் என்று ஒதுங்கிக்கொண்டான்.
அவர்கள் இருவரும் போனில் பேச ப்ரியாவிடம் கேட்டு அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொண்டான் மதன்.
அவனுக்கு இந்த கதையைக்கேட்கும் போது இன்னும் ஆவலாய் இருந்தது....... அதுமட்டுமல்ல ஒருமுறையேனும் தன் தங்கையையும் கயலையும் சேர்த்து பார்க்கவேண்டும் என மனதிற்குள் பேராசைக்கொண்டான் மதன்..........
தொடரும்.........!