மௌனமா - முத்தமா

வான் முகிலை கிழித்து
காற்றின் போக்கில் திரிந்தவன்
இன்றோ
ஒரு வெண்ணிலவின் பிடியில்
சிக்கி தவிக்கின்றேன்
அதன் பின்னே திரிகின்றேன்
பூவின் பின்னே சுற்றும்
ஒரு சிறு வண்டை போல்!!..

உன் இதழின் சிறு புன்னைகையால் - அன்று
என் தூக்கம் தொலைத்தேன்
உன் விழியின் பார்வையால் - இன்றோ
என்னையே நான் தொலைகின்றேன் ..
தேடி பார்த்துவிட்டேன் - எனை
எங்கும் கிடைக்கவில்லை ....
இனி தேட வேண்டிய நிலையும்
காரணம் நான் இருப்பதோ உன்னில்!!.

அதிகாலை பூக்கும் பூவின் - மேல்
படர்ந்த பனித்துளியாய் ....
என் இதயம் முழுவதும் படர்ந்துள்ள
உன் நினைவுகளால் வந்ததடி
எனக்கோ காதலின் காய்ச்சல்!!..
அதன் மருந்தோ நீதானே
உனையின்றி யார் அறிவார் ??.

மௌனம் என்கிற அகிம்சையால்
நீ செய்கின்ற இம்சைகளால்
தினத்தோறும் மடிகின்றேன்.....
உன் மடியோடு என் தலை சாய்த்து
நீ தருகின்ற முத்தத்தால்
இறந்தாலும் உயிர்த்தெழுவேன்...
பலமுறை இவ்வுலகினிலே!!.

சொல் பெண்ணே !!
உன் மௌனத்தால் எனை கொல்வாயா??
இல்லை
உன் முத்தத்தால் மறுவாழ்வு கொடுப்பாயா??

எழுதியவர் : பிரதீப் நாயர் (29-Dec-14, 5:43 pm)
பார்வை : 73

மேலே