6 பொது மக்களே பொது மக்களே

பொது மக்களே! பொது மக்களே! - ரொம்பப்
புத்திகெட்டுப் போனீர்கள் பொது மக்களே!

அரசாங்கம் சரியில்லை என்று சொல்கிறீர்! - பின்
அவனிடமே துட்டுவாங்கி ஓட்டுப் போடுறீர்!

லஞ்சவூழல் பெருகிப்போச்சு என்று கத்துறீர்! - வீட்டில்
லஞ்சம்வரும் மாப்பிள்ளைக்கே பெண்ணைக் கொடுக்கிறீர்!

கொள்ளையடிக் கிறான்பாவி என்று குதிக்கிறீர்! - பணத்தைக்
கொட்டியந்தப் பள்ளியில்தான் மகனைச் சேர்க்கிறீர்!

ஆபாசம்! ஆபாசம்! என்று கொதிக்கிறீர்! - தினம்
அந்தப்பெட்டி முன்புதான் பொழுதைக் கழிக்கிறீர்!

அநியாயம்! அநியாயம்! என்று சொல்லியே
அநியாயத் தில்நீரும் பங்கு கொள்கிறீர்!
அநியாயத் தைஎதிர்க்க சக்தி இல்லையா? - கையில்
அதைவெட்டி எறிகின்ற கத்தி இல்லையா?

ஒற்றுமையின் பலமுணர்ந்து ஒன்று படுங்களேன்!
உள்ளத்தில் பயமொழிந்து குரல்கொ டுங்களேன்!
உங்களுக்குள் முதல்மாற்றம் கொண்டு வாருங்களேன்!
ஊரும் மாறிவரப் பாடு பாடுங்களேன்!

எழுதியவர் : ராஜமாணிக்கம் (29-Dec-14, 5:46 pm)
சேர்த்தது : டோனி கிறிஸ்டோபர் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 82

மேலே