மகிழும் நாட்கள் திருநாள்
மண்ணில் வீழ்வது ஒருநாள் - நாம்
மகிழும் நாட்கள் திருநாள் - அதோ
விண்ணில் தவழும் பலூனாய் - நாம்
வண்ணம் கொண்டு பறப்போம்...!
இதயம் நிறையத் திறப்போம் - துயரம்
இல்லை என்றே நினைப்போம்
இம்மண்ணும் நமக்கு சொர்க்கம்
இனிமை எங்கும் இனிமையே