நண்பன் ஒரு கூலித்தொழிலாளி

நண்பன் ஒரு கூலித்தொழிலாளி

ஓடி
பாடி
விளையாடி

மாடி
கட்டி
குடியேறி

வாழ

காரணம் உன் குடும்பம்
வானமுள் நட்சத்திரம்

வயது ஒன்று
கற்றது வெவ்வேறு

தாய் உறவை கண்டோம்
தாய் நாட்டில் வளர்ந்தோம்

உடுப்புகள் ஒன்றே
இருப்பிடங்கள் வேறே

உணர்ச்சிகள் கண்டோம்
அதிர்ச்சிகள் கேட்டோம்

உறவுகள் ஒன்றே
தொடர்புகள் வேறே

உறுப்புகள் ஒன்றிருக்க
பண்புகள் வேறிருக்க

மண்ணில் வாழ்ந்து சகிததுவிட்டாய்
எண்ணில் நிமிர்ந்து கலந்துவிட்டாய்!

உண்ணும் உணவுகளை
ஆராய்ந்து கொடுத்திருப்பேன்

பழைய சோற்றை
பகிர்ந்து உன்டிருப்பாய்

உன் பசி உன் ருசி
வேறு வேறு

வயிறு உண்டு
அளவு வேறு

உயர்ந்த இடத்தை காட்டினாய்
உண்மையாக வாழ்வதை ஊட்டினாய்

பொறாமை கொள்ளவில்லையே

நீ

வேற்றுமை காட்டியதில்லையே

உதிரம் சிந்தும் உழைப்பு
சுதந்திரம் இழக்கும் தவிப்பு

தாய் வேறு
தாகம் வேறு

நான் ஒன்று
நீ ஒன்று

பணத்தை கண்டாய் குறைவாக
தைரியத்தை கொண்டாய் நிறைவாக

தட்டில் பல இருந்தால் தான் உணவு
கூட்டில் பலர் சேர்ந்தால் தான்
உணவு

பாதை மாறியது
மேதை யார் இங்கு?

பிரிந்துவிட்டோம் வறுமையால்
சகித்துக்கொண்டோம் தனிமையால்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (30-Dec-14, 3:54 pm)
பார்வை : 136

மேலே