இங்கிலீசுப் படிக்கயிலே
ஊர் அறிய உறவறிய - ஒரு
உத்தமனைக் கைப்பிடிச்சேன்
குலம் விளங்கப் பாய்விரிச்சி
குத்து விளக்கு அணைச்சேன்
மூழ்கி நான் முத்தெடுத்து
முழு நிலவாய்ப் பெத்தெடுத்தேன்
முக்கனியின் சாறூட்டி
முப்பாட்டன் பேருமிட்டேன்
நீராட்டிப் புகையூட்டி
தாலாட்டி உறங்க வைப்பேன்
சீவிச் சிணுக்கெடுத்து - முகம்
நீவிச் சடக்கொடிப்பேன்
கண்ணாரப் பொட்டு வச்சி
கறிமிளகாய்ச் சுத்தி வைப்பேன்
முடியெடுத்துக் காது குத்தி
கறிவிருந்துப் பந்தி வச்சேன்
மணிபார்த்துச் சோறாக்கி - வரும்
வழிபார்த்துக் காத்திருப்பேன் - அவன்
இங்கிலீசுப் படிக்கயிலே
இறக்கைக் கட்டி நான் பறப்பேன்
ஆக் காட்டிச் சோறூட்டி
ஆளாக்கி விட்ட மவன்
அரசாங்க வேலையின்னான்
அயளூருப் பயணமின்னான்
இப்ப
வீதி வழி நாயனேன்
விதி படுக்கப் பாயானேன்
நரியனுர் ரங்கு, செல் : 9442090468