முல்லை பெரியாறு அணை

பஞ்சத்துல கெடன்தோமையா
பசியமட்டு கண்டோமையா...
தாகம் மட்டும் இருந்ததையா...
எங்க தாகந்தீக்க யாருமில்ல...

கருப்பசாமி வேண்டிகிட்டு
கழனி செழிக்க மழய கேட்டோ...
கருப்ப மட்டு கண்ட கூட்டம்
வெள்ள தோல பாத்தவுடன்
வெட்டருவா தூக்கி நின்னோம் ...

நீங்க அடக்கி ஆழ வரவில்ல
அண கட்ட வந்தவரு ....
என்ற உண்ம அறிஞ்சவுடன்
ஆதி அந்த அடங்கி போக
அடிமைகளா மாறி நின்னோ....

ஆண்டவன வேண்டிகிட்டு
அஸ்திவாரம் நீங்க போட்டு
அண வேல பாதி நிக்க
ஆங்கிலேய அரசாங்கோ அனுப்பிவச்ச தந்தி ஒன்னு....

அண கட்ட பணமில்ல...
அப்படியே நிறுத்திபுட்டு அடுத்தவேல பாருன்னு...

வந்த சேதி கண்டவுடன், மனசுக்குள்ள இடி இறங்க
மல்லிக பூ சிரிப்பு மட்டு மாறலையே உன் முகத்தில் ...
பாமர கூட்டத்துக்கு வந்த சேதி வாய் திறந்தா
வெடி வச்ச பாற போல சுக்குநூற போகுமுன்னு
மறச்சு புட்ட எங்ககிட்ட....

பசிச்ச முகம் பாத்து பாத்து
எங்க பாசத்துக்கு அடிமையாகி...
பெத்தவள விட்டு வந்த
பொறந்த மண்ண வித்து வந்த...


சொத்த வித்த காச வச்சு
சொர்ணம் போல அணயகட்டி...
பஞ்சத்துல கெடந்த மண்ண
பசுமலையா மத்திப்புட்ட...

எங்க பசி தீத்த பாரிவள்ளல்
பாருலக விட்டுபோக....
பாமரகூட்டம் அப்போ பரிதவுச்சு நின்னதையா...
காடு கழனி கூட கண்ணீர வடிச்சதையா...

எங்கிருந்தோ வந்த நீயு
எங்க துன்ப தாளாம
ஏழ பசி தித்துவச்சு
எல்ல சாமி ஆகிபுட்ட....

அன்று தொட்டு நாங்க எல்லா
கருப்பசாமியோட சேத்து வெள்ள(கார)சாமி உன்ன வேண்டி
வெள்ளாம செய்தோமையா.....

ஆண்டு பல கடந்தாலு அண சொல்லு உன்னரும....
மாற்ற பல வந்தாலு மாறது உன் பெரும....
அடுத்து வரும் சந்ததிக்கு விவசாயம் மட்டுமில்ல,
உன் விவரத்தையும் சொல்லி செல்வோம்......

(தேனியின் தெய்வம் *** கர்னல் ஜான் பென்னி ஹூக்*** அவர்களுக்கு சமர்ப்பணம் )

எழுதியவர் : வினு (30-Dec-14, 11:06 pm)
சேர்த்தது : சதீஷ் குரு நாதன்
பார்வை : 121

மேலே