அதோ அந்த ஆவி
அதோ அந்த ஆவி
அந்த நடுராத்திரி சரியாக பனிரெண்டை சுவர் கடிகாரம் காட்டியவாறு டிங்.... டாங்..........டிங்.............. டாங்..... என்று அதன் குரலில் மணி அடித்தவாறு சொல்லிக்கொண்டு இருந்தது....
அந்த பனிரெண்டு மணி முதல் இரண்டு மணிநேரம்......சாராதவை சமாளிக்க முடியாது.
அதோ..... அம்மா என்னை விடு....என்று அவளுக்குள் ஏதோ..... ஏதோ.....பேசி அந்த உருவத்தை அழைப்பது மட்டும் இல்லாமல்....சிரித்தும் விளையாடுவாள்......
சில சமயம் ஒப்பாரி வைத்து அழ துவங்குவாள்.................சாரதா.......
சாரதாவின் அம்மா மங்கை. அவளை சமாதான படுத்து வதற்குள் போதும்.போதும்.என்று ஆகி விடும்..இது ஒரு நாள் இல்ல இரண்டு நாட்கள் இல்லை..சாரதா வயசுக்கு வந்த நாள் முதல் இந்த இரண்டு ஆண்டுகளாக மங்கை படும் அவதிதான்.....
தன் மகன் சுரேஷ் டில்லிக்கு படிக்க போய் விட்டான்...கணவனும் திடீர் மரணம் ஏற்பட்டு போய் சேர்ந்து விட்டார்...தனிமையில் சாராதவை வைத்து சமாளிக்கவே கஷ்டபடுகிறாள் மங்கை...
கோயில், குளம், சாமியார்கள், மந்திரவாதிகள், ஆஸ்பத்திரி என்று போகாத இடம் இல்லை...... எல்லா இரவு நேரம் அவள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லை. இரவு இரண்டு மணி தாண்டி விட்டால். சாரதா.....சாதாரணமாக பேசுவாள்..இதை நினைத்து மங்கை கண்ணீர் விடாத நாள் இல்லை.
காலை எழுந்தவுடன்.அந்த நடுராத்திரி நடந்தவைகள் சாரதாவிடம் கேட்டால்....இது பற்றி எதுவும் தெரியாதவள் போல் விழிப்பாள் சாரதா...
அப்படி ஏதுவும் நடக்காதது போல் அவளுக்கு ஒரு நினைவும் வராது.........
பக்கத்துக்கு வீட்டு சரஸ்வதி அக்கா மீது சாமி வரும்..அவளிடம் கூட இது பற்றி கேட்டு பார்த்தாள் மங்கை......
ஒரு வெள்ளிகிழமை குளித்து முழ்கி ஈரதுணியோடு சாரதாவை அங்குள்ள அம்மன் கோயிலுக்கு அழைத்து வரும் படி கூறினாள்.
அதன் படி சாரதாவை ஈரதுணியுடன் அந்த கோயிலுக்கு கொண்டு வந்து நிறுத்தினாள் மங்கை.........
அந்த கோவில் அம்மனுக்கு கற்பூரம் ஏற்றி தீப அராதனைகள் காண்பித்துவிட்டு. சாரதாவின் தலையில் விபூதி,மஞ்சள் தண்ணி ஊற்றி.........சரஸ்வதி அக்கா மீது இருந்த சாமியை வரவழைத்து.கேட்டாள். மங்கை.
அதிலும் எந்த பதிலும் இல்லை.
சாரதா.மீண்டும் அந்த நடு ராத்திரியில் வழக்கம் போல்.அம்மா.........அதோ..........அதோ.........
வழக்கம் போல் அந்த உருவம்.சாரதாவின் கண்களுக்கு தென்பட்டது.
ஜல்...ஜல்...என்ற சலங்கை சத்தம்.......அந்த உருவம் சாரதாவின் கண்களுக்கு மட்டும் தான் தென்படும்.
அவள் அந்த உருவத்தை கண்டவுடன்.நல்ல பூவின் மணம் அந்த மனத்தை மட்டும். சாரதாவாள் மட்டும் முகர முடியும்..........நல்ல பூவின் மனம் என்று அவளாக சொல்வாள்.... சலங்கை சப்தம் கேட்கும்...அதுவும் அவளுக்கும் மட்டும் கேட்பதாக சொல்வாள்... ஆனால் உருவமும் மட்டும் மங்கை கண்களுக்கு தென்படவில்லை.அவள் சொல்லும் மனமும் முகர முடியவில்லை.அந்த கும் இருட்டில்... சுழல் காற்று.. அங்கு மெல்லிய சப்தத்துடன்.......அந்த சூழ் நிலையில்...ஒரு பூனை ஓன்று மியாவ்....என்று சப்தம் எழுப்பி கொண்டு ஓடுகிறது...மங்கை பயந்தது போய் அவளின் இதயம் படபடக்கிறது....
அம்மா...............அதோ......அதோ,....... என்னை விடு நான் போரேன்............என்று தலைவிரி கோலமாக.அவள்.அந்த படுக்கையிலிருந்து எழுந்திருப்பாள்.அந்த நேரத்தில்............மூனு மாததிற்கு முன்னால் ஒரு சாமியார் கொடுத்த விபூதியை கூட அவள் தலையில் ஊதி விட்டாள் மங்கை. அதையும் மீறி அவள் அம்மாவின் பிடியிலிருந்து நழுவ பார்க்கிறாள் சாரதா.............திகைத்து சிரித்தவள் அந்த அறையில் ஜன்னல் வழியாக பார்த்தவாறு நின்றாள்.... சாரதா.............விழுந்து விழுந்து சிரிப்பாள் ........
திடீர் யென்று அழுகை......ஒப்பாரி வைத்து தலையிலும் அடித்து அழ ஆரம்பித்தாள்...சாரதா....
அந்த நேரத்தில் நாய்களின் ஊளை இடும் சப்தம்....மங்கைக்கு இன்னும் பயம் அதிகரிக்கிறது..எல்லா தெய்வத்தையும் மனதில் வேண்டி கொள்வாள்....
தினமும் இந்த இரண்டு மணி நேரம் மங்கையால் ஒன்றும் செய்ய முடியாமல் தவிப்பாள்.....
பக்கத்து வீட்டு பாட்டி முனியம்மாவை கூட பல முறை துணைக்கு படுக்க கூப்பிடுவாள்.........அந்த பாட்டி பலமுறை துணைக்கு வந்து மங்கை வீட்டில் படுக்கவருவாள் முனியம்மா...........
அந்த பாட்டி கூட திடீரென்று வருவதில்லை... அந்த பாட்டிக்கும் பயம்.....சாரதா அந்த இரவு நேரத்தில் அட்டகாசம் சொல்லி மாளாது.
பகல் முழுக்க சாரதா.நல்ல பெண்ணாகத்தான் வளம் வருவாள்.அவளின் அம்மாவுடன் வீட்டு வேலைகள் எல்லாம் உதவியாக இருப்பாள். ஏன் இந்த இரவு நேரத்தில் மட்டும் இவளுக்கு .அந்த ஆவியின் பிடி ஏன் ஒன்றும் புரிய வில்லை.
இதை பற்றி சாரதாவிடம் அவ்வப்போது கேட்டாள் மங்கை. ஒன்றும் புரியாதவளாய் விழிப்பாள்..
அப்படி ஒன்றும் இல்லை... ஏம்மா........
நான் ராத்திரி தூங்கினால் கலையில் தன எழுந்திரிக்கிறேன்,என்று அந்த நடுராத்திரியில் நடக்கும் அந்த ஆவி நாடகத்தை தெரியாது என்று தான் சொல்வாள்...............
என்ன செய்வது என்றே புரியாமல் மங்கை தவிப்பாள்.......... அந்த ஊருக்கு எந்த சாமியார், மந்திரவாதி வந்தால்.முதல் ஆளாய் நிற்பாள் மங்கை சாரதாவுடன்...........
அங்கு வருகை தரும் மந்திரவாதி, சாமியார்கள் ஏதாவது சொல்லிவிட்டு பணத்தை வங்கி விட்டு போய்விடுவார்கள். பலன் இல்லாமல் பணத்தை பறிகொடுப்பது தான் மிச்சம் மங்கைக்கு..............
தன் மகன் டில்லியிலிருந்து படிப்பை முடித்து விட்டு ஊர் வந்தான் சுரேஷ்.....
மங்கைக்கு ஏற்பட்ட இந்த இரவு நேரத்தின் நாடகத்தை பார்த்தவன்.....புரிண்டுக்கொண்டவனாய் மறுநாள் அவனுக்கு தெரிந்த நரம்பீயல் மருத்துவர்....அந்த பிரபல மருத்துவரை வீட்டுக்கு வரவழைத்தான் சுரேஷ்...............
சாரதாவிடம் பேச்சு கொடுத்தவாறே......அந்த மருத்துவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னாள்...........
சரிமா...........இன்னிக்கு ராத்திரி என்னுடைய கிளினிக்கிற்கு கொண்டு வாருங்கள்...ஒரு ஊசி போடுகிறேன்..........இன்று இரவு என்ன செய்கிறாள் என்பதை கவனித்து நாளைக்கு எனக்கு தெரியபடுத்துங்கள்.........
மேற்கொண்டு என்ன செய்யலாம் யென்று சொல்றேன்னு... என்ற மருத்துவர் சொன்னார்.................
அதன்படி அந்த இரவு எந்த பிரச்சனையும் இல்லாமல் சாரதா நன்றாக தூங்கினாள்... எந்த தொந்தரவு இல்லாமல் மங்கையும் உறக்கத்தில் ஆழ்ந்தாள்......
மறுநாள் மருத்துவரிடம் விவரம் சொல்லப்பட்டது...
எல்லாம் புரிண்டுக்கொண்டவராய்.
சுரேஷ்............ உங்க தங்கச்சிக்கு வந்து இருக்கிறது, ஆழ்ந்த தூக்கம் அவளை தொடும்போது அவளின் மூலை மட்டும் ஓய்வு பெறாமல்.இப்படி ஒரு செயலில் ஈடு படுகிறாள்.இது ஒரு நரம்பு தளர்ச்சி.. இது அவளுக்கே தெரியாது..........சில பெண்கள் பூப் பெய்த பிறகு இப்படி வருவது சகஜம்தான். மாதம் ஒரு ஊசி என்று பத்து மாதம் ஊசி போட்டால் போதும் என்று சொல்லி நிறுத்தினார்.........டாக்டர்...
முற்றும்.