முள் படிந்த ரோஜா
முள் படிந்த ரோஜா!!!!
அழகு தேவதையே இவளிடம் தான் குடி இருந்தாள்....அழகுக்கு ஓர் அங்கம் என்றால் இவளை தான் சேரும்...அத்தனைக்கும் அழகு...இவளை பார்த்தவர்கள் உச்சி முதல் பாதம் வரை வர்ணித்து விடுவார்கள்.....அழகின் சிற்பம் இவள் தானா??? என்று எண்ண கூட தோன்றும்.....
அபிலா... படித்த பட்டதாரி....ஒரு தனியார் கல்லூரியில் விரியுறையாளர்......அந்த கல்லூரியல் சிறப்பு விரியுறையாளர் என்று கூட சொல்லலாம்.....
ஆறு மாதத்திற்கு முன்னால் தனது வேலையை எழுதி கொடுத்து விட்டு வீட்டில் வந்து அடங்கி விட்டாள் அபிலா......
தனி மரமாய் தனி அறையில்.....அவளுக்கு இப்படி இருக்க தான் ஆசை....
அவளின் அம்மா ராதிகா பல முறை கேட்டு பார்த்து விட்டாள்.....
வேலையை எழுதி கொடுத்த விபாரத்தை விளக்குவதாக......இல்லை..... அபிலா......
அவளை அப்பா ராதாகிருஸ்ணன் தனியார் வங்கி மேனேஜர்....தான் மகளோடு அவனால் முடித்த அளவிற்கு கேட்டு பார்த்து விட்டான்....பதில் சொல்லாமல் மௌனம் சாதிக்கிறாள் அபிலா....
சரி கல்யாண ஆசை இருக்கலாம்...என்று எண்ணி மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்... அவளின் பெற்றோர்.....
வர மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம்....வேண்டாம்...என்று தடுத்து கொண்டே வந்தாள் அபிலா......
சமிபகாலமகவே....வீட்டில் யாருடனும் பேசுவது கிடையாது....அவள் அவளின் அறைக்குள்லேயே....தாழிட்டு அடைந்து கிடப்பாள்....
ராதிகா ஏதாவது சமைத்து வைத்திருந்தாள்.தேவையான அளவு எடுத்து சாப்பிட்டு விட்டு திரும்பும் அறைக்குள் அடைந்து விடுவாள்....
ஏன் இந்த மாற்றம் என்பது ராதிகாவுக்கு புரியவில்லை.....
சமிப காலமாக எல்லா வெள்ளி கிழமையும் கோவில் போவதாக சொல்லிவிட்டு.....போய்விடுகிறாள்.....அவள் திரும்பி வர எப்படியும் மாலை மூன்று மணி ஆகி விடும்,..
ராதிகாவும் கோவில் தானே என்று ஏதும் பேசாமல் இருந்து விடுவாள்....
அவ்வபோது ராதிகா தன் கணவனிடம் மகளின் போக்கை சொல்லி வருத்தபடுவாள்....
திடீரென்று ஒரு வெள்ளி கிழமை ஒரு டாக்டர் மாப்பிள்ளை என்று அபிலாவை பெண் பர்ர்க்க வந்தார்கள்...
ராதிகாவிற்கு கையும் ஓட வில்லை காலும் ஓட வில்லை....செய்வது அறியாமல் திகைத்து நின்றாள்....
வந்தவர்களை ஹாலில் அமர வைத்தவளாய்.....அபிலா இப்பத்தான் கோவிலுக்கு போய் இருக்கா....அவ வர எப்படியும் மாலை மூனு மணியாகும்...அவ எல்லாம் வெள்ளி கிழமையும் கோவிலுக்கு போற பழக்கம்.....
சரி இருங்க எங்க வீட்டு காரருக்கு போன் செய்து வர சொல்லுறேன்...என்றவள்..கையில் செல் போனுடன்...பேசினால்...
வந்த மாப்பிள்ளை வீட்டாரும்.....
உங்க பொண்ண பாக்கவே வேண்டாம்....நல்ல அழகான் பொண் தானே...என்று அவர்களுக்குள் பேசி கொண்டனர்....
ராதாகிருஸ்ணன்னும் இவர்களை வரவேற்றவாறு உள்ளே நுழைந்தான்.....
இன்னும் கொஞ்ச நேரத்துல அபிலாவும் வந்துடுவா....என்று ராதாகிருஸ்ணன் சொல்ல....
அபிலா வரும் வரை காதிருந்தனர்....மாப்பிள்ளை வீட்டார்.....
எதிர் பார்த்த படி அபிலாவும் வந்து விட்டாள்...
இவர்கள் வந்த செய்தி தெரிந்த அபிலாவுக்கு கோபம்...அவளின் உடல் முழுக்க பரவியது.....
மாப்பிள்ளை வீட்டில் உள்ள ஒருவர்..மேற்கொண்டு ஏதாவது பேசணும்னா.....சொல்லுங்க.....
நிச்சய தேதி குருச்சிடலாம்....என்று சொல்ல....
யாருக்கு நிச்சயம்.......என்று அபிலாவின் கோப பார்வை....பொங்கி எழுந்தது....
அப்பா நான் எத்தனை வாட்டி சொல்றது....எனக்கு கல்யாணம் வேண்டாம்னு.....சொன்ன புருஞ்சுக்க மாட்டிக்களா.....
என்று தன் அப்பாவை நோக்கி புயலாய் பாய்ந்தாள்.....
அம்மா அபிலா சொல்றத கேளுமா.... இது வர எத்தன வரன் வந்திருக்கு....வரதே எல்லாம்..... வேண்டாம்....வேண்டாம்ன்ன....எப்படி,,,,உம மனசுல இருக்கிறத வெளிப்படையா சொல்லும்மா....அவளின் அம்மா ராதிகா கண்ணீர் சிந்த கேட்கிறாள்....
அம்மா இதே பாருமா.... எனக்கு கல்யாணம் வேண்டாம்.....இதுக்கு மேல ஏதும் கேட்டு தொல்ல பண்ணாதே....என்று முடிவாக சொல்லி விட்டாள் அபிலா.....
வந்த மாப்பிள்ளை வீட்டாரும் எதுவும் சொல்லாமல் வந்த வழியே போய்விட்டார்கள்.....
இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த...ராதாகிருஸ்ணன்....கோபம் பொங்கி ஏழ.....
அபிலாவை பார்த்து ......
ஏண்டி என்ன நினச்சுட்டு இருக்கே....ஊருல நாலு பேறு நாலு விதமா பேசி எங்கள காறி துப்பனுமா.....உனக்கு இருபத்தி ஐந்து வயசு ஆகுது....இது வரை கல்யாணம் பண்ணி கொடுக்களான.....பெத்தவங்களை தான் கையாள ஆகதவன்னு ஊர் காறி துப்பும். உறவுகள் கை தட்டி சிரிக்கும் இத எதிர் பார்கிறிய நீ....
அந்த வேலுவும் போய் சேர்ந்துட்டான்....இருந்தாலும் கட்டி கொடுத்து தொழ்ச்சிருக்கலாம்....
இல்ல எவனையாவது காதலிச்சு தொலைரிய சொல்லு ......எந்த சாதிய இருந்தாலும் கட்டி கொடுத்து தொலயுறோம்.....என்று அருகில் இருந்த நாற்காலில் தன் தலயை தாங்கி பிடித்தவனாக....அமர்ந்து கொண்டான்.....
ராதிகாவும் எவ்வளவோ....கேட்டு விட்டாள் ஆனால் அபிலாவின் முடிவு கல்யாணம் வேண்டாம் என்பதில் மட்டும் பிடிவாதமாக இருக்கிறாள்......
ஆனால் வாரம்...வாரம்...கோவிலுக்கு பேவதில் தவறுவது கிடையாது....
நானும் கோவிலுக்கு வரேன்னு சொன்னாள் ராதிகா.....நீ எல்லாம் அந்த கோவிலுக்கு வேண்டாம் என்று தடுத்து விடுவாள்.அபிலா....
அபிலாவின் நிறைய மாற்றங்கள் உள்ளதை அறிந்து கொண்டாள் ராதிகா....
வழக்கம் போல் அந்த வெள்ளி கிழமை.....காலையில் மங்களகரமான உடையில் கோவிலுக்கு கிளம்பினாள்....அபிலா...
அவளுக்கு அறியாமல் ராதிகா பின் தொடர்ந்தாள்.....
அபிலா அந்த ஊர் ரயில்வே ஸ்டேசனில்....
ராதிகாவும் ஒளிந்திருந்து.....அவளுடன் அந்த ஸ்டேசனில்....
வழக்கம் போல் சிவா வருகைக்காக...காத்திருக்கிறாள் அபிலா.....
கொஞ்ச நேரத்தில் அந்த சிவாவும் அவள் அருகில்.....
அவனின் முகமும் கையவும் காலும் காண்பதற்கே ஒரு அருவருப்பு.....தன் முகத்தை சுருக்கிய வாறு மறைந்து இருந்து...ராதிகாவின் நோட்டம்.....
சரியாக அந்த ரயிலும் வந்தது....அபிலா....சிவாவுடன்...அந்த ரயில் பெட்டியில்....ராதிகாவும் அந்த பெட்டியில்....மறைந்தவாரே.......
அவன் அருகில் அமர்ந்து கொண்டு.....அபிலாவும் அந்த மனிதனும்.....பேசி சிர்த்தவரே.....
என்றும் இல்லாத சந்தோசம் அபிலாவின் முகத்தில்...என்ன என்பது ஒன்றும் புரியாமல்...ராதிகா தயக்கத்தில்....
இடையில் வந்த ஒரு ஸ்டேசனில் இருவரும் இறங்கினர்....அவர்களை பின் தொடர்ந்தாள் ராதிகா....
அந்த ஸ்டேசனுக்கு அருகில் உள்ள பெரிய ஆஸ்பத்திரி.....இருவரும் உள்ளே நுழைந்தனர்.....
ராதிகாவும் அவர்களின் பின் புறம்.....
எயட்சுக்கு மருந்து கொடுக்கும் கவுன்டரில் அபிலாவும்....குஷ்டத்திற்கு மருந்து கொடுக்கும் இடத்தில் அந்த சிவாவும்....
மருந்தை வாங்கி கொண்டு திரும்பி பார்த்தாள் அபிலா.....அவள் அம்மா கண்ணீர் சிந்திய வாறு.....
அம்மா நீயா??? ஏம்மா இங்க வந்தே....
என்னம்மா இது????என்ற கேள்வி முகத்துடன் ராதிகா.....
சிவாவும் மருந்து வாங்கி கொண்டு அபிலாவின் அருகில் வர.....
அம்மா நான் ஒரு நாள் செய்த தவறுக்காக......எனக்கு எயட்ஸ்....எனக்குள்ள இலவசமா....வாங்கிட்டேன்.....
இதுக்கு காரணம் உன் தம்பி வேலு மாமாதான்.....
இவள் சொல்வது புரியாமல் கண்களை துடைத்தவாறு....செவி சாய்த்து கேட்டாள் ராதிகா.....
சின்னப்பவே எனக்கும் வேலு மாமாவுக்கும் கல்யாணம்ன்னு சொல்லி பேசி வைத்ததுனாலே.....
மாமா ஒரு நாள் என்னுடன் தப்பான உறவு கொண்டு.....நான்தானே கல்யாணம் செய்ய பேரேன்னு.....தப்பு பண்ணிட்டு....
அது போய் சேர்ந்துருச்சு.....இன்னைக்கு நான் தான் அவதி படுறேன்.....
சிவாவை காண்பித்து இவருக்கு குஷ்டம் நாங்க ரெண்டு பேரும் மரணத்த எதிர் நோக்கி போய் கொண்டு இருக்கிறோம்....
அதனாலே நாங்க ரண்டு பேரும் நண்பர்களா இருகோம் என்று சொல்லி நிறுத்தினாள் அபிலா....