தந்தயின் வாழ்வு உண்மை கதை

அழகான கிராமம் , அமைதியான குடும்பம் கடின உழைப்பால் விளைந்தவர் பன்னீர் செல்வம் மனைவி செல்வம் . பெயரிலே இருவருக்கும் அன்பான பொருத்தம் . ஆனாலும் பன்னீர் கொஞ்சம் கோவக்கரர் . அவர்களுக்கு மூன்று பெண்குழந்தைகள் கடைசியாக ஒரு ஆண்குழந்தை . அப்பா பண்நீர்ருக்கு எந்தவிதமான தீயபழக்கமும் கிடையாது . அவருக்குன்னு உள்ள பழக்கம் கடையில் டி குடிப்பது மட்டும் தான்.
பன்னீருக்கு இருக்கும் ஒரே ஆசை நான்கு பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதுமட்டுமே . பன்னீருடன் பிறந்தவர்கள் 5 சகோதரிகள் மட்டுமே . அண்ணனின் கோவத்தை புரிந்து கொல்லாத சகோதரிகள் .அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது . ஒரு அண்ணன் செய்யவேண்டிய கடமைகள் எல்லாம் முடிந்ததால் அனைத்து சகோதரி உரவௌம் சற்று தூரம் ஆகின .

பன்னீர் தனது முளுமுயர்ச்சில் இறங்கினர் . முதல் இரண்டு குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்தார் ஆனா அது நீண்ட வருடம் நீடிக்கவில்லை . பணம்கட்டமுடியாத காரணந்தலும் அடுத்த இரண்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதாலும் அனைவரையும் அரசு பள்ளியில் சேர்த்தார் .
தந்தயின் ஆசையை போலவே அனைவரும் ஆரம்பத்தில் நன்றாகவே படித்தனர் . இடைநிறுத்தம் எதுவுமேன்ரி மூத்தமகள் பனிரெண்டாம் வகுப்பை முடித்தாள் . அந்தசமயத்தில் பண பற்றா குறையேன் காரணமாக கல்லுரிபடிப்பை தொடரமுடியவில்லை .
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரான்டாவதுமகள் இடை நிறுத்தம் எதுவும் இன்றி பள்ளிபடிப்பை முடித்தாள் . அவள் கல்லூரி செல்லவேண்டும் என்று தந்தையிடம் கூறினால் . எனவே தனது உறவினரிடம் பண உதவி கேட்க்க அதற்க்கு அவர்கள் பொண்ணுகளை எல்லாம் ஏன் படிக்கவச்சுக்கிட்டு அடுத்தவிட்டுக்கு போறவங்கல என்று ஏளனம் பேச பன்னீர் தன்னால் முயன்ற முயற்சியை செய்து அரசு கலை கல்லூரியில் கணினி பாட திட்டத்தில் சேர்த்தார் .
தன்மைகளை கல்லூரியில் சேர்த்தது தந்தை பன்னீருக்கு மாபெரும் சந்தோசம். இடையில் தனது ஒரே மகன் பள்ளிக்கு செல்ல மறுக்கிறான் தான் மகன் நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவனை அடுத்த மாவட்டத்தில் விடுதியில் தங்கி படிக்கவைத்தார் அனால் அவன் அங்கு 8ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க விரும்பவில்லை அதை தந்தையிடம்கூர அவர் பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் சேர்த்தார் அங்கு அவனுக்கு இடை நிறுத்தம் ஏற்ப்பட்டது . மீண்டும் அவன் அங்கு படிக்க விருப்பம் இல்லை என்று தந்தை பன்னீர் இடம் கூர அவர் தனது ஊரில் உள்ள பள்ளியில் சேர்த்தார் 9 ஆம் வகுப்பில் அவனுக்கு படிப்பில் விருப்பம் இல்லை என் அனிவருக்கும் புரிந்தது . இருப்பினி பன்னீர் மகன் படிப்பை நிறுத்த விரும்பவில்லை .

அதனை விரும்பாத அவன் வீட்டை விட்டு வெளியேறினான் யாரிடமும் கூரவில்லை

அவனை தேடி 6 மதங்கள் அலைந்தார் பன்னீர் வீட்டிற்கு ஒரே ஆண்பிள்ளை என்பதால் கவலை அனைவரையும் வாட்டியது . குடும்பமே சோகத்தில் முழக கிடந்தது . சாதகம் ,சோசியம் என்று ஏராளம் .

அதில் ஒரு சாதகர் உங்கள் மகன் உங்கள் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் அருகில் உள்ள ஓட்டலில் வேலை பார்க்கிறான் என்று கூர . பன்னீர் அப்பொழுதே தனது இரண்டாவது மகள் கல்லூரி அங்குதான் உள்ளது அவளயும் கூட்டிக்கொண்டு சென்று அங்கு உள்ள ஒவுவரு ஓட்டலாக எரீரன்கி பார்த்தன ஏமாற்றமடைந்த அவர்கள் வீடு திரும்பினர்.

மறுநாள் ஒரு சோதிடர் உங்கள் மகன் திருப்பூரில் இருக்கிறன் என்று கூற உடனே பன்னீர் திருப்பூர் கிளம்புகிறார் .
அங்கு சென்று தேடுகிறார். அந்த சோதிடர் . ஒரு அட்ரஸ் கொடுத்தார் , அங்கு சென்று பன்னீர் கேட்க போட்டோ வை காட்டி அதற்க்கு அவர் ஆமாம் அவன் இங்குதான் வேலை பார்த்தான் நேற்று தான் எங்க அப்பாவ பாத்துட்டு வாரே ஊருக்கு போகணும்னு காசு கேட்டான் . நானும் 300 ரூபாய் கொடுத்து அனுப்பினேன் என்று கூர . பன்னீர் வீடு திரும்ப பேருந்து நிலையம் வந்தார் .

பன்னீர் முகந்தில் வேதனையை கண்ட ஒருவர் என்ன சார் என்ன எதாவது பிரட்சினையா என்று கேட்க்க .
கவலையை யாரிடம் பகிர்வது என்ற நிலைமையில் இருந்த பன்னீர் தனது கவலை யை கூற . சரி சார் கவலை படாதிக போட்டோ போன் நம்பர் குடுங்க நான் இங்கு பாத்தா போன்பன்றே சார் என்றார் . பன்னீர் அதனை கொடுத்து விட்டு ஊரு திரும்பினர் .
குடும்பமே கவலை பட்டுக்கொண்டிருந்தது . இரண்டு நாட்களுக்கு பிறகு திருப்பூரிலிருந்து போன் .
சார் நாந்தான் உங்க மகண நான் பாத்தே ஒரு ஓட்டல்ல பேசுனே உங்க அப்பா தேடிவந்தாருனு சொன்னே அதுக்கு அவன் அவங்கக்கிட்ட சொல்லதிக என்று சொன்னான் . நீங்க வாங்க சார் பாக்களா என்றார் .உடனே பன்னீர் திருப்பூர் கிளம்பினர் .

காலை 8 மணிக்கு திருப்பூர் சென்றடைந்தார் .

அந்த நம்பர்கு கால் செய்து சார் நான் பன்னீர் பேசுறே ஓகே ஓகே சார் நீங்க என் வீட்டுக்கு வாங்க நான் கூட்டிக்கிட்டு போறேன் என்று கூறி போனை வைத்தார் . பன்னீர் வீட்டுக்கு சென்றார் . அப்போது சார் வாங்க சரி வாங்க போகலாம் ஆனான் என் மகனுக்கு உடம்பு சரி இல்ல மருத்துவமனைஇல் இருக்கான் போய் பாத்துட்டு அப்பிடியே போகலாம் என்றார் . சரி சார் என்று கூறிக்கொண்டே நடந்தனர் . மருத்துவமனை வந்தது. பன்னீர் சார் உங்க மகண நான் பாக்கள என் தோழர் தன பாத்தார் அவர வரசொல்லிருக்கே அவர் வந்த உடனே கிளம்பலாம் என்றார் . அப்போ நீங் பாக்கலைய சார் . இல்ல பன்னீர் சார் . மருத்துவமனை வந்தது மகனை பார்த்து விட்டு அமர்ந்து இருந்தனர் . என்ன சார் உணங்க தோழர் இன்னும் காணும் . வந்துடுவார் பன்னீர் சார் என்று கூரிக்கொண்டெ தோழர்கு கால் செய்தார்.
பன்னீர் சார் எண்தோளர் நம்பர் ச்வௌச் ஆப்னு வருது நீங்க முயற்சி பண்ணுக என்று நம்பர் கொடுத்தார் . பன்னீர் நம்பர் வாங்கி முயற்சி செய்து கொண்டே இருந்தார் .
மதியம் 2 மணி ஆனது ஆனால் யாரும் அங்கு வர வில்லை . அப்போது ஒரு போன் வந்தது . பன்னீர் சார் நீக இங்கே இருங்க என்மகளுக்கு உடம்பு சரி இல்லையாம் சேலத்துல நன் போட்டு வந்துடுறேன் என்ருகூரிக்கொண்டெ கிளம்பினர் அவர் .

மாலை 6 மணி ஆனது யாரும் வரவில்லை பன்னீர் அங்கே இருந்தார் . மறுநாள் பொழுது விடிந்தது . யாருமே வரவில்லை. சேலம் சென்றவரையும் காணவில்லை . இங்கு என்ன நடக்குதுனே புரியவில்லை என்னை ஏன் வர சொன்னார் இப்ப எங்க போனார் மகனை இவர் பாத்தாரா பாக்கலையா ஒண்ணுமே புரியாத நிலையில் பன்னீர் ஊரு திரும்பினார். ஒரு மாதத்திற்கு பிறகு தன் ஊரிலே ஒருவர் உங்கள் மகன் 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு துனிக்கடைஇல் வேலை பார்ப்பதாக கூறினர் உடனே அவரை கூட்டிக்கொண்டு அங்கு சென்றனர் . மகன் உண்மையிலேயே அங்கு தான் வேலை பார்த்துக்கொண்டிருந்தான்
பின் அனைவரும் சென்று அவனை பார்த்தனர் . ஏன் டா ஒரு போன் பண்ணி சொல்லிருக்கலாம் தான நாங்க என்கைஎள்ளம் தேடுனோம் தெர்யுமா . என்றால் அக்கா . அதற்க்கு அவன் நம்பர் மறந்துடுச்சு என்றான். அதன் பிறகு அவன் அங்கு வேலை பார்க்க மாட்டேன் என்று கூரிவிட்டு வீட்டுக்கு வந்தான் . நண்பட்களுடன் சேர்ந்து 2 மாத ஊரை சுற்றினான் .
பின் அவனை ஐடிஐ எ/சி மெக்கானிக் படிக்க வைத்தனர் . அவன் அந்த தொழிலை விரும்ப வில்லை . டிரைவராக ஆசைப்பட்டான் . அந்தசமயத்தில் முதல் மகளுக்கு திருமணம் நிச்சைக்கப்பட்டது .தன் மகளுக்கு நல்லகனவரை அமைத்து கொடுத்தார் பன்னீர். கடந்த கசப்பான அனுபவத்திற்கு பின்பு இப்போதுதான் பன்னீர் மனம் மகிழ்ச்சியாக இருந்தது . இரண்டாவது மகளை பி .எ ட் படிக்க வைத்தார் .
மூன்ர வது மகள் பி.sc படித்துக்கொண்டிருந்தாள்.

எழுதியவர் : inbakumar (31-Dec-14, 1:20 pm)
சேர்த்தது : இன்பகுமார்.மு
பார்வை : 187

மேலே