கவிதா என் காதலியே

புதிது புதிதாய் பூக்கும் பூக்கள்
புது நாளை வரவேற்க
புதிது புதிதாய் எழும் புத்தலைகள்
புது நிலவை வரவேற்க
புதிது புதிதாய் இசை பாடும் பூங்குயில்கள்
புது வசந்தத்தை வரவேற்க
புதிது புதிதாய் புன்னகை பூக்கிறாய்
சிந்தனையை செந்தமிழ் இதழில் ஏந்தி
புதிதாய் புத்தம் புதிய புத்தகமாய்
புத்தாண்டில் நடந்து வருவாய்
கவிதா என் காதலியே !
வரவேற்க காத்திருக்கிறேன் நான் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (31-Dec-14, 7:11 pm)
பார்வை : 84

மேலே