அழகு

அழகு அவளைப் பார்த்தபின் தான்
அழகாய் தெரிந்தது
அழகு அவளை நேசித்தபின் தான்
நளினமாய் தெரிந்தது
அழகு அவளுடன் பழகினபின் தான்
அதன் அர்த்தம் புரிந்தது
அழகு அவளுடன் நடந்தபின் தான்
வேகமாய் தெரிந்தது
அழகு அவளுடன் பேசினபின் தான்
மென்மையாய் தெரிந்தது
அழகு அவளுடன் கைகோர்த்தபின் தான்
நம்பிக்கையாய் தெரிந்தது
அழகு அவளுடன் வாழ்ந்தபின் தான்
மொத்த வாழ்க்கையும் அழகாய் தெரிந்தது...

எழுதியவர் : சதிசு குமரன் (1-Jan-15, 12:28 am)
சேர்த்தது : சதீசுகுமரன்
Tanglish : alagu
பார்வை : 96

மேலே