உலகம் இன்று

இப்போதெல்லாம் நம்மை அதிகாலை பத்து மணிக்கு எழுப்புவது நாம் வளர்க்கும் கோழியல்ல , பொக்கிஷம் போல பத்திரப்படுத்திய அலாரம் க்ளாக்கும் அல்ல , நாம் பணம் கொடுத்து சேர்த்துக்கொண்ட நம் புதிய உடன்பிறப்பு மொபைல்போன் தான். இன்னும் சிறந்த உடன்பிறப்பு என்றால் ஆண்ட்ராய்டு. இவை நம் வாழ்வையே மாற்றி அமைக்கின்றன . காலை எழுந்தவுடன் வாசிக்கும் செய்தித்தாளில்ருந்து இரவு பார்க்கும் சீரியல் வரை அனைத்தும் நம் போனுக்கே வந்துவிடுகின்றன.

இப்போதெல்லாம் நம் பொழுதுபோக்கு பேஸ்புக்கும் , ஆண்ட்ராய்டு கேம்களும்தான் . இதையும் தாண்டினால் விஜய் டிவி நிகழ்ச்சிகள்தான். மின்விசிறியைவிட வீடுகளில் அதிகம் ஒடுவது டிவிதான் .

பேஸ்புக் , காட்டுத்தீகூட இதோடு மெதுவாகத்தான் பரவும் . நேரில் சந்திக்கும் நண்பர்களைவிட பேஸ்புக்கில் தான் நமக்கு நண்பர்கள் அதிகம் . பேஸ்புக்கூட ஒரு கட்டத்தில் அழுத்துவிடும் ஆனால் இந்த கேம்கள் அழுத்தேபோகாது.கைகள் தேய்ந்தேவிடும் போன் திரையை தொட்டுத்தொட்டு.

இந்த தலைமுறை தந்தைகளின் மடியில் தவழ்வது குழந்தைகள் அல்ல , மடிக்கனினிதான் . தாய்மார்களின் காதுகள் கேட்பது இயர்போனிலிருந்து வரும் பாடல்கள்தான் , மழலையின் ஒலியையல்ல .

பொழுதுபோக்கிற்காக வந்த இவைகள் நம் வாழ்க்கையையே பொழுது போக்காக மாற்றிக்கொண்டிருப்பது வேதனையே!

எழுதியவர் : ragul (1-Jan-15, 4:43 am)
சேர்த்தது : RAGULJOTHIRAJ
Tanglish : ulakam indru
பார்வை : 406

மேலே