பெண்

வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைக்கும்
விந்தை மனிதர்கள் இல்லை இக்காலத்தில்
பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து
சின்ன சின்ன முடிவுகள் எடுக்க அனுமதித்து
அவள் புகழ் பேசி அவளை பூரிக்க செய்து
அவள் தன்னை தன்னிகரற்றவள் என உணரும் போது
தன் வாழ்க்கைக்கான முடிவுகளை எடுக்க தடை செய்து
அவள் மனக் கதவுகளை பூட்துவதற்கு பதிலாக
பெண்ணை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைக்கலாம்

எழுதியவர் : தங்கமீன் (1-Jan-15, 9:29 am)
Tanglish : pen
பார்வை : 124

மேலே