செல்கிறது ஓர் ஆண்டு பிறக்கிறது ஓர் ஆண்டு
செல்கிறது ஓர் ஆண்டு
விடைபெற்றுச் செல்கிறது ஓர் ஆண்டு...
நியாபகங்கள் பற்பல தந்தே...
நன்மைகள் பல செய்ய
எண்ணியது அவ்வாண்டு
சிந்தித்தால் எதுவும் இல்லை
நிற்கின்றேன் என் சிரமே தாழ்ந்து
எண்ணங்களும் நோக்கங்களும்
நன்மைக்காய் நாடி நிற்க
வாய் சொல்லினில்
வாழ்ந்திட்ட வருடமது...
என் செய்தோம் எவை செய்தோம்
என்றே சிந்திக்க நேரமின்றி
புத்தாண்டு துவங்கியதே
பாழாய் பட்டாசு வெடியில்...
நன்மையே செய்வேன் இனி,
குடியில்லை கூத்தில்லை
பொறுப்புடனே வாழ்வேனென
சத்தியங்கள் மதுக்கடையில்...
புது வருடம் ஆரம்பம்
உன் மரணம் உன்னருகில்
பெறவில்லை புதுவருடம்
இழந்தது விட்டோம் ஒர்வருடம்...
சிந்திப்போம் ஒரு நிமிடம்
என் செய்தோம்
எவை செய்தோம்
எதை இழந்தோம் ஒர்வருடம்...
அவ்வருடம் இழந்தது விட்டோம்
இவ்வருடம் இழக்கவேண்டாம்
அவ்வருட எண்ணத்தில்
இவ்வருட எண்ணங்கள் சிறக்கட்டும்
நல் கல்வி அறிவூட்ட
சமவுடமை பெருகிடவே
தீண்டாமை அழிந்திடவே
சிறக்கட்டும் நம் செயல்கள்
உள்ளங்கள் மகிழ்ந்திடவே
உணர்வுகளை மதித்திடுவோம்
இல்லாதோர் நிலை எண்ணி
உள்ளவற்றில் மகிழ்ந்திடுவோம்
கைகோர்ப்போம் மனிதனவோம் :)
என்றும் அன்புடன் -ஸ்ரீ-