வீணாகும் கல்வி

வீணாகும் கல்வி


சினிமா மோகத்தில்
அரசியல் நாடகத்தில்
மயங்கிய தமிழகத்தில்
கல்வித்தரம் படுகுழியில்

பட்டம் பெற்றவரில் பலரும்
எழுதப் படிக்கத் தெரிந்தவர் நிலலையில்

இலவச தேர்ச்சி
ஒருநிலை வரை.
அதன் பின்னர்
திறமையைச் சோதிக்காமல்
மனப்பாடத் திறனில்
உச்சம் செல்பவர்க்கு
உச்சி குளிர நூற்றுக்கு நூறு.

அடிப்படையே தெரியாதவர்க்கும்
அறுபது சதவீதம் எளிதாகக் கிடைக்கும்.

கொள்ளுத் தாத்தா காலத்து
தேர்ச்சிக்குத் தருகின்ற
குறைந்தபட்ச மதிப்பெண்ணே#
இன்னும் மதிப்பீட்டில்

கடின உழைப்பின்றி
போட்டித் தேர்வுகளில் வெல்வது
அல்வா சாப்பிடுவது போலன்றி.
கல்லைக் கடித்துண்ணும் கனவாகப் போகும்.


கல்வி நிலையங்களில்
மாணவர்களை
வாழ்க்கைக்குத் தயார் செய்தால்
அவர்களின் ஒழுக்கம் உயரும்
கல்வித் தரமும் உயரும்

தேர்வுக்கு மட்டும் பயன்படும் கல்வி
நல்ல மனிதர்களை உருவாக்காது.


யாரைக் குறை சொல்வது
வளாக, வகுப்பறை வன்முறைக்கும்
கொலைகளுக்கும்?

ஒழுக்கத்தையும் உடற் பயற்சியையும்
நன்னூல் வாசிப்பையும் தவிர்த்து
நாமளிக்கும் கல்வி
விழலுக்கு இறைக்கும் நீர்.

#35%

எழுதியவர் : மலர் (1-Jan-15, 11:28 am)
Tanglish : veenakum kalvi
பார்வை : 601

மேலே