புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

சாதுவொன்று சமத்தாகி,
சாடையிலே மிருதுவாகி,
அழகூட்டும் அறிவாலே -
ஆழ்மனதுப் பார்வையிலே..

ஆடையுடுத்தி வந்ததோ,
ஆசையெனும் இன்பத்தில்,
ஆடம்பரம் இல்லாமல்-
ஆண்டுக்கு வழிவிட்டு..!

துன்பங்கள் மறைந்துவிட;
துயரங்கள் தீர்ந்துவிட,
நட்பென்னும் ஆழ்கடலில் -
நங்கூரமா யிருக்க...

நல்லதொரு திருநாளில்
நலமுற வாழ்த்துகிறேன்;
அன்னையின் ஆயுதமாம்
அன்பாலே நானின்று..!

அரிதான பிறப்பென்றால்
அவளேதான் ஆதாரம்;
விழிநீரால் வலித்தாங்க -
வளராதோ நம்தேகம்..!

ஆயுளது அவளென்றால்
ஆண்டவனை யாரறிவார்-
அவள்பாடும் தாலாட்டில்
அவன்நேரில் வந்திடுவான்..!

நிலையான வொருசெல்வம்
நீடூடி வாழ்ந்திடவே...,
நெஞ்சார வாழ்த்துகிறேன் -
நாளெல்லாம் நலம்பெறவே ..!

குடும்பத்தின் குழப்பங்கள்
குழிபோட்டு மறைந்துவிட;
உதயமான தொருவருடம் -
வழிகாட்ட வாழ்த்துகிறேன்..!

எல்லாமே யவன்கையில்
எண்ணங்கள் ளில்லாமல்,
உழைத்துவிட முன்னேறு -
உலகமுன் துணையோடு..!

சங்கடங்க ளென்றாலும்;
சந்தோஷ மென்றாலும்;
சுத்துகின்ற பூமியென -
சுதந்திரமாய் இருந்துவிட..

சுற்றம்மெலாம் விலகாது
சுகமருந்து நீயெனவே
அள்ளித்தரும் வருடமென
அருவியாக வாழ்த்துகிறேன்.. !

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜெ (1-Jan-15, 11:34 am)
பார்வை : 142

மேலே