புத்தாண்டுக் கதவுகளே

கதவுகளே கதவுகளே
புத்தாண்டுக் கதவுகளே
திறவுங்கள் திறவுங்கள்
நீண்டு அகன்றிடவே

புதிய எண்ணம் புதிய கோணம்
பதிய வண்ணம் தோணிடவே
பனித்துளியென படைத்திடவே
பழையனவையை ஒழித்திடவே

மனிதனை மனிதனாக பார்த்திடவே
ஜாதியும் மதவெறியும் அழித்திடவே
மாற்றான் மண்ணினை மதித்திடவே
பேராசை அரக்கனை அகற்றிடவே

நாட்டின் பற்றினை வளர்த்திடவே
வெற்றியின் துந்துபி ஒலித்திடவே
கூட்டுறவு தொழில் செழித்திடவே
வாகை மலர் அணிந்திடவே

உணவுப் பாண்டம் நிறைந்திடவே
பசியின் பிணியும் தீர்ந்திடவே
சரிநிகர் சமானம் பெற்றிடவே
சகோரத்துவம் போற்றிடவே

பாசமும் அன்பும் பெருகிடவே
நேசமும் நேயமும் கூடிடவே
எல்லாம் பொதுவெனக் கொண்டிடவே
கலைகள் பாராட்டி மகிழ்ந்திடவே

எல்லா மொழியும் சீர்படவே
மொழியின் மேன்மை புரிந்திடவே
மீண்டும் கற்றுத் தெரிந்திடவே
வரையுங்கள் நூல்கள் பலப்பலவே

முயற்சி தன்னை நாடிடவே
உழைப்பின்னுறுதியை உணர்ந்திடவே
படைப்பின் ஆற்றலை அறிந்திடவே
மாபெரும் வளர்ச்சியை பார்த்திடவே

பயங்கரவாதத்தை விரட்டிடவே
திறவுங்கள் திறவுங்கள்
புத்தாண்டுக் கதவுகளே
வலிமையும் இனிமையும் மீட்டிடவே

எழுதியவர் : ரமணி (1-Jan-15, 4:18 pm)
பார்வை : 77

மேலே